உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2019

உள்ளாட்சி தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பட்டியல் அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுச்சாவடி அலவலர்களாகப் பணிபுரிய, ஆசிரியர்கள் பெயர் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல், 2016ல் இருந்து நடத்தப்படாமல் உள்ளது. வார்டு மறுவரையறை செய்வதில், தாமதம் ஏற்பட்டதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக, நீதிமன்றத்தில், வழக்கு நிலுவையில் உள்ளது.விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்துவதற்கான, முன்னேற்பாடு பணிகள், கீழ் நிலைகளில் நடந்து வருகின்றன.

'ஓட்டுச்சாவடி அலுவலர்களை நியமிப்பதற்காக, ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, ஊரக வளர்ச்சித் துறை சார்பில், பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்ய, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களின் விபரங்களை, அதற்கான படிவத்தில் பூர்த்தி செய்யுங்கள். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், அவற்றை ஒப்படைக்க வேண்டும். அதில், கடந்த தேர்தல்களில், அவர்கள் பணி செய்த அனுபவம் உள்ளதா என்பதையும், அவர்களின் போன் எண், முகவரி உள்ளிட்ட விபரங்களையும், இணைத்து அனுப்ப வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

6 comments:

  1. 🚫🚫🚫🚫🚫🚫🚫🚫

    *என்னடா... என் கல்விக்கு வந்த சோதனை...*

    🎯 வட்டார வள மையத்தை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்...

    🎯 பள்ளிகளை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்....

    🎯 அதிக அளவில் பதிவேடுகள் பராமரித்தால்
    அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....

    🎯 ஆங்கில வழிக்கல்வி முறையை அறிமுகம்
    செய்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்...

    🎯 பள்ளிகளை மூடி நூலகம் திறந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....

    🎯 இணையதளத்தில் அமர்ந்து கொண்டு எந்நேரமும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம்
    உயரும்...

    🎯 அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்.....

    🎯 ஆசிரியர்கள் கைரேகை வருகை பதிவு மேற்கொண்டால்
    அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....

    🎯 எப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சூழ்நிலையினை கருத்தில் கொள்ள
    போகிறார்கள்?

    🎯 ஆசிரியர்களை பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை
    எப்போது உணர போகிறார்கள்?

    🎯 பிற வேலைகளை தவிர்த்து
    மாணவர்களுக்கு பாடம் மட்டும் நடத்த ஆசிரியர்களுக்கு எப்போது சுதந்திரம் தர போகிறார்கள்?

    🎯 இன்றைய அதிகாரிகள் அனைவரும் அன்றைய அரசு பள்ளி மாணவர்கள்தானே!

    🎯 அன்று
    மாணவனை மகுடமாக்கும் அதிகாரம்
    ஆசிரியரிடம் இருந்தது...

    🎯 இன்று மாணவனின் எதிர் காலத்தை மழுங்கடிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம்....

    *எப்படி கல்வித்தரம் உயரும்...*

    வெறும் கட்டிடங்களில் அல்ல கல்வித்தரம்...

    கல்வியை மூலதனமாக எண்ணாமல்
    செலவீனமாக எண்ணும் அரசாங்கம் இருக்கும் இடத்தில் கல்வி
    தரமானதாக அல்ல....

    *கட்டாந்தரையாகக் கூட இருக்க வாய்ப்பு இல்லை...*

    🚫🚫🚫🚫🚫🚫🚫🚫

    ReplyDelete
    Replies
    1. இவை அனைத்தும் நம்மை முட்டாள்களாக்கும் யுத்திகள்..

      Delete
  2. Kalviyai Thaarai vaarthu koduthuvittargal intha arasiyalvathigal..

    ReplyDelete
  3. Padichavan ellam garlic galicham karuthu sonnaga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி