அனைத்து வகை பள்ளிகளும் விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு பள்ளிக்கல்வித்துறை தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 26, 2019

அனைத்து வகை பள்ளிகளும் விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு பள்ளிக்கல்வித்துறை தடை


விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது' என, அனைத்து பள்ளிகளுக்கும், கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்வி துறையின், வேலை நாள் காலண்டர் அடிப்படையில் தான் இயங்க வேண்டும். பள்ளி கல்வி துறையின் விதிமுறைகளை பின்பற்றி, பள்ளிகள் நடத்தப்படும் என, உறுதிமொழி கடிதம் அளித்த பிறகே, அந்தபள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.ஆனால், பல பள்ளிகள், இந்த உறுதிமொழியை சரியாக பின்பற்றுவதில்லை. தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, வேலை நாட்களையும், தேர்வு நாட்களையும் நிர்ணயம் செய்கின்றன.

மேலும், பள்ளி கல்வி துறை விடுமுறை அறிவிக்கும் நாட்களில், சில பள்ளிகள், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை வர வைக்கின்றன.இது குறித்து, பெற்றோர் தரப்பில், தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வாயிலாக, பள்ளி கல்வி துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் அடிப்படையில், பள்ளிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மகேஸ்வரி, அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசால் அறிவிக்கப்படும் பொது விடுமுறை நாட்களில், அனைத்து வகை பள்ளிகளிலும், எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது.

இதை, அனைத்து வகை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உள்ளிட்ட, அனைத்து வகை பள்ளிகளும், தவறாமல் பின்பற்ற வேண்டும்.பொது விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளின் மீது, அரசு விதிகளின்படி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. வரவேற்கதக்கது. இந்த காலாண்டு தேர்வின்போது ஆசிரியர்களை கலந்தாய்வு என்ற பெயரில் பலிவாங்கும் என்னம் எதற்கு. பிள்ளைகள் எவ்வாறு படிப்பார்கள்?.மாற்றம் பெரும் ஆசிரியர் கள் தன் பிள்ளைகளை எங்கே சேர்ப்பது? சற்று சிந்தித்து பாருங்கள்.

    ReplyDelete
  2. Private schools conducting special classes in all holidays the circulars are not obeying by private schools if anyone oppose I will give name list but no one take actions

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி