TET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் முடிவுகள் அறிவிப்பு -. 'பல பட்டதாரிகளுக்கு தேர்வு எழுதவேதெரியவில்லை' - TRB - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 21, 2019

TET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் முடிவுகள் அறிவிப்பு -. 'பல பட்டதாரிகளுக்கு தேர்வு எழுதவேதெரியவில்லை' - TRB


ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 'பல பட்டதாரிகளுக்கு தேர்வு எழுதவே தெரியவில்லை' என டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர 'டெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடந்தன. இரண்டு தாள்களுக்கும் சேர்த்து ஆறு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.இதில் முதல் தாளுக்கான தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. நேற்று அறிவித்தது. மொத்தம் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 314 பேர் எழுதினர். 150 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வில் பெரும்பாலானவர்கள் 60 மதிப்பெண்களுக்கு குறைவாகவே பெற்றுள்ளனர். அதிகபட்சமாக சிலர் 85 மதிப்பெண் வரை பெற்றுள்ளனர்.அனைவருக்கும் மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.

இந்த தேர்வு எழுதிய பட்டதாரிகள் பலருக்கு சாதாரண போட்டி தேர்வு முறையில் 'ஷேடிங்' எனப்படும் சரியான விடையை வட்டமிடும் முறை கூட தெரியவில்லை; விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யவும் தெரியவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:கணினி வழியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்தபோது பல தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பலர் எந்த இடத்தில் சரியான தகவலுக்கான ஷேடிங் செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை. அதனால் மதிப்பீடு செய்யவே முடியவில்லை.சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளுக்கு வட்டமிட்டுள்ளனர். அதேபோல் விண்ணப்பத்திலேயே தேர்வு எழுதுவதற்கான விருப்ப மொழியை குறிப்பிடுவதில் குளறுபடி செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 comments:

  1. TRB தேர்வு நடத்தவே தெரியவில்லை.கணினி வழி தேர்வு 10:00am to 8:00pm வரை பதிலை விவாதம் செய்து விடையளித்தார்கள்.இதை சரிசெய்ய துப்பில்ல தூ தூ.....

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள்

      Delete
  2. 2012. 2013.2017 இதுல மட்டும் எப்படி சரியாக இருந்தது

    ReplyDelete
  3. 2012 2013 2017 la pass pannavanga Enna pantrathu

    ReplyDelete
  4. Olunga posting ah potta ellarum Nalla padichi exam eluthuvanga... Yemathuravangala nambi yepti Tet exam ku nu prepare pantrathu... Thirumbavum yemanthupogava.

    ReplyDelete
  5. Velaikku senraverkalai asinkapaduthi ippa velai vaippukku kathirupavarkalaiyum asinkapaduthukirarkal

    ReplyDelete
  6. இனி எல்லாமே online exam தானு முடிவுபண்ணீட்டீங்க... அதுக்காகதான் இப்படி வீண் பழி போடுறீங்க... Educational minister spelling என்ன என்று கேளுங்க உங்க ministera.. correcta அவர், சொல்லுகிறாரா என்று பார்ப்போம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி