ஆசிரியர்களின் நியமனம் , பணிநிரவல் தொடர்பான அரசாணை எண் :165 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு - - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2019

ஆசிரியர்களின் நியமனம் , பணிநிரவல் தொடர்பான அரசாணை எண் :165 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு -


அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு...


எத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.

ஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது..

அரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்கு எதனையும் தாக்கல் செய்யவில்லை என்பதால், அந்த அரசாணைக்கெதிராக நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என்றஅரசின் வாதத்தை நிராகரித்த நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் தாரணி அடங்கிய டிவிசன் பெஞ்ச் அரசின் உத்தரவை சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்தது.

இடைக்காலத் தடை விதிக்காமல்.. அரசாணையையே நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருப்பது பாராட்டிற்குரியது.. வரவேற்கத்தகுந்தது..

இதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர்களின் நியமனத்திற்கும்.. பணிநிரவலுக்கும் தமிழக அரசு முன்தேதியிட்டுப்  பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட முடியாததாகிவிடுகிறது..

9 comments:

  1. Kadaisi bench sivagyanam
    Neeyelam theerpu Solla vanthuta

    ReplyDelete
    Replies
    1. Unnakku joka irrukku this judgement lightened our life. Very Thankful judges

      Delete
  2. நல்ல தீர்ப்பு.வரவேற்கிறோம்.

    ReplyDelete
  3. Appo computer science grade I result varuma varatha.anyone tell me

    ReplyDelete
  4. Don not get over excitement, this is just temporary relax to YOU.

    ReplyDelete
  5. Result விடாம yan exam vaikrenga

    ReplyDelete
  6. About Special teachers recruitment do any notification or information can we get from kalviseithigal network?

    ReplyDelete
  7. பணிநிரவலில் மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்துமா தெரிந்தவர்கள் சொல்லவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி