அனைத்து பள்ளிகளிலும் 'துாய்மை நிகழ்வுகள் 2019 ' செப்.,1 முதல் 16 வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு. - kalviseithi

Sep 7, 2019

அனைத்து பள்ளிகளிலும் 'துாய்மை நிகழ்வுகள் 2019 ' செப்.,1 முதல் 16 வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு.

பள்ளிகளில் தூய்மை நிகழ்வுகள் 2019
இதில் சிறந்து விளங்கும் மாவட்டத்திற்கு அக்.,2ல் மகாத்மா காந்தி பிறந்த நாளில் விருது வழங்கப்படவுள்ளது. துாய்மை இந்தியா திட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் &'துாய்மை நிகழ்வுகள்&' என்ற பெயரில் செப்.,1 முதல் 16 வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பறை, கழிவறைகளை சுத்தம் செய்தல், சுகாதார விழிப்புணர்வு குறித்து உள்ளூர் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.செப்.,6 முதல் மரக்கன்று நடுதல் மற்றும் குப்பை மறுசுழற்சி செய்தல், துாய்மை பிரசாரம் செய்தல், சுகாதாரம் குறித்த திட்டமிடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்பை புகைப்படம், வீடியோ எடுத்து வாட்ஸ்-ஆப், மெயில் மூலம் மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். அதுவும் துாய்மை நிகழ்வு இணையதளத்தில் பதிவேற்றப்படும்.இதில் சிறந்து விளங்கும் மாவட்டத்திற்கு காந்தி பிறந்தநாளான அக்.,2ல் விருது வழங்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு சுகாதாரம் சார்ந்த கடித, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி