சந்திரயான் 2, தற்போது நிலவில் இறங்குமா ? விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நம்பிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 7, 2019

சந்திரயான் 2, தற்போது நிலவில் இறங்குமா ? விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நம்பிக்கை!


தைரியமாக இருங்கள்.. நான் உங்களுடன் இருக்கிறேன்.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நம்பிக்கை!

தைரியமாக இருங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன் என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 2, தற்போது நிலவில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரயான் 2 நிலவில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரயான் 2ல் இருக்கும் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது.

 சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், நம்பிக்கையாக இருங்கள். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.நாம் மீண்டும் முயற்சி செய்வோம்.எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாம் இந்த பயணத்தை தொடர்வோம்.நான் உங்களுடன் இருக்கிறேன், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி செய்துள்ள டிவிட்டில், இந்தியா தனது விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறது. அவர்கள் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுத்துள்ளனர். இந்தியாவை எப்போதும் அவர்கள் பெருமைக்கு உள்ளாக்கி உள்ளனர். நாம் தைரியமாக இருக்க வேண்டிய நேரம் இது.

நாம் தைரியமாக இருப்போம். இஸ்ரோ இயக்குனர் என்னிடம் இது குறித்து விளக்கம் கொடுத்தார். நாம் நம்பிக்கையுடன் இருப்போம். தொடர்ந்து நம்முடைய ஸ்பேஸ் ஆராய்ச்சிகளை செய்து வருவோம், என்றுள்ளார்.

3 comments:

  1. Thanks to our Honourable Prime Minister and our Scientists and congratulations on their achievements.

    ReplyDelete
  2. தயவு செய்து கவனியுங்கள் பூமியில அதிக பேர் சாப்பிட ௭துவும் இல்லை தூங்க வீடு இல்லை,போங்க சார் நீங்களும் உங்க சந்திராயன் 2-வும் Ok வாழ்த்துக்கள் சிவன் Sir Bye good evening

    ReplyDelete
  3. தயவு செய்து கவனியுங்கள் பூமியில அதிக பேர் சாப்பிட ௭துவும் இல்லை தூங்க வீடு இல்லை,போங்க சார் நீங்களும் உங்க சந்திராயன் 2-வும் Ok வாழ்த்துக்கள் சிவன் Sir Bye good evening

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி