செப் 24 முதல் காலாண்டு விடுமுறை - ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 9, 2019

செப் 24 முதல் காலாண்டு விடுமுறை - ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது?


பள்ளிக்கல்வி துறை மூலம் நடைபெற இருந்த ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது. அதிலும் குளறுபடிகள் நடந்ததால் இடைநிலை ஆசிரியர் பணிநியமன ஆணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை நிறுத்தி வைக்கப்பட்ட பொதுமாறுதல் கலந்தாய்வு காலாண்டு விடுமுறையில் நடத்தப்படும் என அறிவித்தது. நீதிமன்ற உத்தரவால் மூன்றாண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டு ஓராண்டு காலம் பணிபுரிந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது குறித்த தகவல் அரசால் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது செப் 24 முதல் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. இந்த வாரத்திற்குள் அறிவிப்பு வரலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

8 comments:

  1. When will annouce councelling date?

    ReplyDelete
  2. Màny teachers are waiting for councelling.

    ReplyDelete
  3. எந்த டெட் எழுதினாலும் நீங்கள் மிகப்பெரிய திறமை மிக்கவரா இருந்தாலும் பட்டம் பல வாங்கி இருந்தாலும் தமிழ்நாட்டுல எந்த போஸ்ட் டும் போடவும் போறதில்ல. போட்டாலும் 7000 8000 தான் சம்பளம். இதை எதிர்த்து கேளுங்க திறமை மிக்கவர்களே . பகுதி நேரம்னு ஒரு போஸ்ட் உருவாக்கி அதனால் எங்களை வாழ்க்கை யை 8 வருடங்கள் தொலைத்து நொந்து போராடிக்கிட்டு இருக்கோம். எங்களை கேள்வி கேக்குறீங்க . எல்லாரோட வயித்துல யும் அடிக்கிற அரச கேட்க மாட்டேன் குறீங்க

    ReplyDelete
  4. இதற்கு முழு முதற் காரணம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான்.... அதாவது நீங்கள் தான்.... இந்த கேள்விக்கு பதில் இதனுள்ளே அடங்கியிருக்கிறது நன்றாக படித்தால் இதனுடைய அர்த்தம் புரியும்....

    ReplyDelete
  5. போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித் தீர்கள் ஆட்குறைப்பு ஆட்குறைப்பு அரசாணை எதிர்த்தும் தான் போராடினோம் அப்ப எதுத்த நீங்க இப்ப எங்க போயிட்டீங்க

    ReplyDelete
  6. KANDIPPA INTHA MASAM NADAKKUMA COUNCELING

    ReplyDelete
  7. நடப்பதற்கான அறிகுறிகள் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி