டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கஅவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2019

டிரைவிங் லைசென்சை புதுப்பிக்கஅவகாசம் ஓராண்டாக குறைப்பு: தவறினால் மறுபடியும் 8 போடணும்


தமிழகம் முழுவதும் ஆர்டிஓ அலுவலகங்களில் டிரைவிங் லைசென்சை புதுப்பிக்க 5 ஆண்டு அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. தவறினால் மீண்டும் கட்டணம் செலுத்தி 8 போட்டு ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க தவறினால் ஆண்டுக்கு அபராதமாக ₹50 செலுத்தி ஓட்டுனர் உரிமம் புதுப்பித்துக்கொள்ள 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 5 ஆண்டு அவகாசம் ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓரு ஆண்டு தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முன்னிலையில் 8 போட்டு காட்ட வேண்டும்.இந்த புதிய நடைமறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்துள்ளது. எனவே ஓட்டுனர் உரிமம் காலாவதி தேதியை கவனிக்காதவர்கள், அதனை பார்த்து உரிய காலத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்க முன்பு 5 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்குள் புதுப்பிக்க தவறினால் ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பதற்கான கட்டணம் செலுத்தி, மீண்டும் 8போட்டு பாஸ் ஆனால் தான் ஓட்டுனர் உரிமம் கிடைக்கும்’ என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி