950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2019

950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்


தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 950 தலைமையாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பு செயலர் மு.முருகேசன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 500 தலைமையாசிரியர் பணியிடங்களும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 450 தலைமையாசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

மாவட்ட கல்வி அலுவலருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற்றால், மேலும் 50-க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடம் காலியாகும் நிலை உள்ளது.இதேபோல், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான கலந்தாய்வும் நடைபெற வேண்டிய நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் 31ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், குறைந்தபட்சம் 15 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில், தலைமையாசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், பள்ளிகளை ஆய்வு செய்தல், கற்றல் கற்பித்தல் பணி கண்காணிப்பு இல்லாமல், மாணவர் நலன் பாதிக்கப்படும். காலாண்டு தேர்வு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு உடனடியாக காலியாக உள்ள தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு கலந்தாய்வை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திடும் வகையிலும், கலந்தாய்வுக்கான அட்டவணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி