பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு இனி எம்.இ, எம்.டெக் மட்டும் போதாது?-அனில் சஹஸ்ரபுதே.. - kalviseithi

Sep 14, 2019

பொறியியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் பணிக்கு இனி எம்.இ, எம்.டெக் மட்டும் போதாது?-அனில் சஹஸ்ரபுதே..


பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற இனி எம்.இ மற்றும் எம்.டெக் படித்திருந்தால் மட்டும் போதாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக பேசுகையில்,

இனி பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணியாற்ற எம்.டெக்,எம்.இ படிப்புகள் மட்டும் போதாது. 8 மோட்யுல் கோர்ஸ் எனப்படும் தொழிநுட்ப கல்வியை போதிக்க சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வருட படிப்பினை முடித்தவர்களே பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும் என கூறியுள்ளார். அடுத்த வருடம் முதல் இந்த நடைமுறை செயலாக்கம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார் 

பிஎஸ்சி படித்தவர்கள் எப்படி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற எப்படி பிஎட் படிக்க வேண்டுமோ அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக இனி அந்த புதிய சிறப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த மேலும் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு படிப்பை முடிக்கவில்லை எனில் தற்போது பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்ப்படுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. இவனுங்களுக்கு இதே பொழப்பு... நெனச்சி நெனச்சி எதையாவது செஞ்சிட்டு இருப்பானுங்க..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி