தமிழ் வழியில் படித்தவர்கள் முன்னுரிமை பெறுவது எப்படி? மூன்று நீதிபதிகள், 'பெஞ்ச்' விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2019

தமிழ் வழியில் படித்தவர்கள் முன்னுரிமை பெறுவது எப்படி? மூன்று நீதிபதிகள், 'பெஞ்ச்' விளக்கம்


'தமிழ் வழியில் படித்ததற்கு ஆதாரமாக, கல்வி நிறுவனங்களின் தலைவர் அளிக்கும் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே, வேலை வாய்ப்பில் சலுகை பெற முடியும்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறுவது தொடர்பாக, சில கேள்விகளுக்கு முடிவு காண, மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவை, தலைமை நீதிபதி நியமித்தார்.


இந்தக் குழு, விரிவான விசாரணை நடத்தியது.வழக்கை விசாரித்த, நீதிபதிகள், ஆர்.சுப்பையா, சி.வி.கார்த்திகேயன், சி.சரவணன் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:பயிற்றுமொழியாக தமிழில் படித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க, தமிழக அரசு கொள்கை முடிவெடுத்தது. 2010ல், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில், காலியிடங்களில், ௨௦ சதவீதம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என, தெரிவித்தது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்றால், அவர்கள், தமிழை பயிற்று மொழியாக கொண்டிருக்க வேண்டும். எனவே, முன்னுரிமை சலுகை பெற வேண்டும் என்றால், தமிழ் பயிற்று மொழியாக படித்ததற்கான சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும்.அத்தகைய சான்றிதழை, கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்லது கல்லுாரி முதல்வர் அல்லது பதிவாளர் வழங்க வேண்டும். குறிப்பிட்ட வடிவத்தில், அந்த சான்றிதழ் இருக்க வேண்டும்.அகடமி தேர்வு அல்லது போட்டி தேர்வை, தமிழில் எழுதினார் என்பதற்காக, ஒருவர் முன்னுரிமை சலுகை பெற முடியாது. சான்றிதழ் தாக்கல் செய்யாமல், சலுகை பெற முடியாது.சட்டக் கல்லுாரிகள் பலவற்றில், பயிற்று மொழியாக, தமிழ் இல்லை. சில கல்லுாரிகளில் தான், தமிழில், சட்டப் படிப்பு உள்ளது.

தமிழில் முழுமையாக படித்து, அதற்கான சான்றிதழை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவரிடம் இருந்து பெற்றால் தான், வேலை வாய்ப்பில் முன்னுரிமை சலுகை கோர முடியும்.தற்போது, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டில் உள்ள சட்டக் கல்லுாரிகளில் தான், தமிழ் வழியில், சட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி