ஆசிரியர்களின் அசல் சான்றிதழ் விவகாரம் அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு - kalviseithi

Sep 29, 2019

ஆசிரியர்களின் அசல் சான்றிதழ் விவகாரம் அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு


ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அசல் சான்றிதழ்களை, கல்லுாரி நிர்வாகம் வைத்திருப்பது தொடர்பாக, முறையான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலை, ௨௦௧௮ டிசம்பரில் அனுப்பிய கடிதத்தில், 'ஆசிரியர்களின் கல்வி சான்றிதழை சரிபார்த்த பின், அவற்றை உடனடியாக திருப்பி கொடுத்து விட வேண்டும்; கல்லுாரி நிர்வாகம், சான்றிதழை வைத்திருக்கக் கூடாது' என, கூறிஉள்ளது.மனு தாக்கல்கல்விசான்றிதழ்களை, கல்லுாரி நிர்வாகம் வைத்திருந்தால் தான், அதிகாரிகளின் ஆய்வின்போது சமர்ப்பிக்க முடியும். மேலும், ஆசிரியர்கள் வசம் சான்றிதழ்கள் இருந்தால், அதை காட்டி வேறு வேலையிலும் சேர முடியும்.எனவே, எங்களிடம் பணியாற்றும் வரை, ஆசிரியர்களின் சான்றிதழ்களை வைத்திருக்க, அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும். அண்ணா பல்கலையின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள, தனியார் கல்லுாரி சார்பிலும், மனு தாக்கல் செய்யப்பட்டது.இம்மனுக்கள், நீதிபதி, ஜி.ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர், கே.எம்.விஜயன், வழக்கறிஞர்கள், விஜய் ஆனந்த், ஆர்.கோபிநாத், அண்ணா பல்கலை சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஏ.குமார் ஆகியோர் ஆஜராகினர்.

நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:

'வேலையை விட்டு செல்பவர்கள் மற்றும் ராஜினாமா செய்பவர்களின், அசல் சான்றிதழ்களை, கல்வி நிறுவனங்கள் வைத்திருக்கக் கூடாது' என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது. பணியில் இருக்கும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழை வைத்திருக்கக் கூடாது என, கூறவில்லை.அண்ணா பல்கலையின் உத்தரவு, வேறு வேலைக்கு செல்பவர்களின் நலன்களை காக்கும் விதத்தில் உள்ளது.அதேநேரத்தில், பணியில் இருக்கும் ஆசிரியர்களின், அசல் சான்றிதழ்களையும் திருப்பி தர வேண்டும் என கூறுவது, கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாணவர்களின் நலன்களுக்கு உகந்ததாக இருக்காது.எனவே, அண்ணா பல்கலை உத்தரவின் ஒரு பகுதி, ரத்து செய்யப்படுகிறது. அசல் சான்றிதழ்களை வைத்திருப்பது தொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ.,யின் உத்தரவு போல, முறையான அறிவிப்பை, அண்ணா பல்கலை பதிவாளர் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி