புதிய சம்பள பட்டியல் விவகாரம்: அரசு பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம் - kalviseithi

Sep 21, 2019

புதிய சம்பள பட்டியல் விவகாரம்: அரசு பணியாளர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்


அரசு ஊழியர்களுக்கு தற்போதுள்ள புதிய சம்பள பட்டியல் பிரச்னை தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற ஊழியர்கள், கருவூல ஊழியர்கள் என தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

தமிழக அரசு வெளியிட்ட புதிய சம்பள பட்டியலில் பல்வேறு துறைகளில் சீனியர் பணியாளர்களை விட தற்போது பணிக்கு வந்த ஜூனியர் பணியாளர்களுக்கு அதிகமான சம்பளம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்து நிதித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.அதனால், அரசு துறையில் உள்ள சீனியர் மற்றும் ஜூனியர் பணியாளர்களின் சம்பள விவரங்களை அரசுக்கு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலக துறை தலைவர்கள், அரசு அளித்துள்ள படிவத்தை பெற்று முழு விவரங்களையும் அதில் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அனுப்பி வைக்க வேண்டும். தவறாக பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி