உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு- விரைந்து அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு. - kalviseithi

Sep 27, 2019

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியல் தயாரிப்பு- விரைந்து அனுப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு.


உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை அக்டோபர் 26-ம் தேதிக்குள் சம்பர்பிக்க மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்களை நியமிப்பது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.அதில், உள்ளாட்சி தேர்தலை திறம்பட நடத்தி முடித்திட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமனத்திற்கு உரிய நபர்களின் விவரங்களை வரும் 26ம் தேதி மாலை 5 மணிக்குள் மின்னஞ்சலில் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2 comments:

  1. உண்மையாவா சொல்றீங்க இதையேதான் எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க

    ReplyDelete
  2. உண்மையாவா சொல்றீங்க இதையேதான் எத்தனை நாளைக்கு சொல்லுவீங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி