அரசு மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.கள் இனி பிரின்ஸிபால்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2019

அரசு மேல்நிலைப்பள்ளி ஹெச்.எம்.கள் இனி பிரின்ஸிபால்: ஆசிரியர்கள் மத்தியில் கிளம்பும் எதிர்ப்பு!


அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இனி தனியார் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் போல பிரின்ஸிபால்என்றே அழைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் தற்போது கல்லூரி முதல்வர்கள் பிரின்ஸிபால்என்று அழைக்கப்படுகின்றனர்.

அதேபோல் தனியார் மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் பிரின்ஸிபால் என்றுதான் அழைக்கப்படுகின்றனர்.  இந்தநிலையில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் புதிய மாற்றமாக, அரசு மேல்நிலைப்பள்ளிகளுடன் அதன் அருகில் உள்ள 15 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் நிர்வாகங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஹெட்மாஸ்டர் என அழைக்கப்பட மாட்டார்கள் என்றும், பள்ளி முதல்வர், பிரின்ஸிபால்எனஅழைக்கப்படுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் ஆசிரியர்களுக்கான பணி,  அவர்களுக்கு விடுமுறை அளிப்பது, தேர்வு நடத்துவது, பள்ளிகளின் விடுமுறை, மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் அவரே இறுதி முடிவு எடுப்பார். இதில் மேல்நிலைப்பள்ளியின் அருகில் உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளி முதல்வரின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்றும் அரசு கூறியுள்ளது. தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இனி ஆசிரியர்களாகவே  கருதப்படுவர். அவர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

13 comments:

  1. பள்ளிக்கு வேலைக்கு போகிறோம் என்ற எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் இதை எதிர்க்கவும் இல்லை, பொருட்படுத்தவும் இல்லை..

    ReplyDelete
  2. யாரும் எதிர்க்கவில்லை

    ReplyDelete
  3. It is a welcome move , all teachers would be happy, as they are doing their work sincerly already.

    ReplyDelete
  4. At the same time all BT s working in both middle and high school must be considered same even for promotion from the date of appoinment as BT teacher , without bias.

    ReplyDelete
  5. சரியான முடிவு. பாடம் நடத்தி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் தரம் உயர்த்த வேண்டும் என்று எண்ணுபவர்கள் இதை எதிர்க்க மாட்டார்கள்

    ReplyDelete
  6. எதிர்ப்பு என்பது தவறான தலைப்பு.....

    ReplyDelete
  7. OP அடிப்பவர்களே எதிர்கிறார்கள்

    ReplyDelete
  8. Higher secondary school hm is called principal but elementary and middle school hm why not called HMS? It is also eligible that posts.plz consider the requests.......

    ReplyDelete
  9. HMS MUST BE RECRUITED AS TALENT EXAM

    ReplyDelete
  10. இதெல்லாம் யாருங்க உங்களுக்கு சொல்றது. இதற்கான ஆதாரம்(GO)இருக்கா?...சமீபகாலமாக ஆசிரியர்களாகிய நாமே அது,இதுனு whatsapp ல சேர் பண்ணிக்கிட்டு இருக்கோம். ஆனால் அதற்கான ஆதாரங்கள் உண்டானு பார்த்தா இருக்காது.

    ReplyDelete
  11. eduction department must one.no elementry and school education and collgeate promotin based on lowyer ievel

    ReplyDelete
  12. முறையாக பள்ளிக்கு சென்று,O.p
    அடிக்காமல் பணி செய்யும் எந்த ஆசிரியரும் இதை எதிர்கமாட்டார்கள், வரவேற்பார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி