தமிழே தெரியாத கல்லூரி மாணவர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2019

தமிழே தெரியாத கல்லூரி மாணவர்கள்!


உயர் கல்வி கற்கும் மாணவர்கள் கூட தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத நிலை தமிழகத்தில் உள்ளது. இந்த அவலத்தை கடலூர் மாவட்ட காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம், புவனகிரியில் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிபவர் அம்பேத்கர். இவர்,  தனதுமுகநூல் பக்கத்தில், அண்மையில் வெளியான ஒரு புதிய திரைப்படத்தின் பதாகையுடன் மேள,தாளத்துடன்கூச்சலிட்டபடி, அனுமதியின்றி சாலையில் ஊர்வலமாகச் சென்று, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்கு, கல்லூரி மாணவர்கள் காவல் துறைக்கு எழுதிய மன்னிப்பு கடிதம் ஒன்றை கடந்த 21-ஆம் தேதி பதிவேற்றியிருந்தார்.அந்தக் கடிதத்தில், "நான் கீழ்புவனகிரியைச் சேர்ந்த பி.காம். மாணவர்.

இனிமேல் காவல் துறை அனுமதியின்றி, திரையரங்கில் பேனர் வைக்க மாட்டேன், மீறி செய்தால் சட்ட நடவடிக்கைக்கு கட்டுப்படுவதாக, ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் இருந்த எழுத்துப் பிழைகளை, சிவப்பு நிற கோடிட்டு காட்டி, முகநூலில் காவல் ஆய்வாளர் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில்,"மாணவர்களின் கல்வி நிலை இவ்வாறு போனால், யார்தான் காப்பார்கள் இவர்களையும், இவர்களின் தமிழையும்? என கேள்வி எழுப்பியுள்ள காவல் ஆய்வாளர், இதுபோன்ற இளைஞர்களுக்கு சரிவர தமிழைப்போதிக்காமல் விட்ட ஆசிரியர்கள் மீது கோபம் கொள்வதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதம், முகநூல் மட்டுமல்லாது கட்செவி அஞ்சல் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பரவியது. இதேபோல, மேலும் சில மாணவர்கள் எழுத்துப் பிழைகளுடன் எழுதிய மன்னிப்பு கடிதங்களையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்வு என்ற நிலை இருக்கும் வரையில் இது தொடரும் இது மேலும் பத்தாம் வகுப்பில் கூட தேர்ச்சி சதவீதம் கருத்தில்கொண்டு அரசானது தேர்ச்சி விழுக்காட்டை கூட்டி செய்கிறது இது ஒரு விதத்தில் அதன் காரணமாக அமையலாம்.

    ReplyDelete
  2. Kalviyai viyabaram aakiyadhal vandha vinai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி