கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? டி.ஆர்.பி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு. - kalviseithi

Sep 5, 2019

கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? டி.ஆர்.பி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.


மதுரை தயானா, சென்னை குழந்தைவேல், ரோஹினி, விழுப்புரம் விஜயகுமார், ஞானவேல் ஆகியோர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில், தமிழ் வழியில் பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 23-ந் தேதி நடந்த தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்வை மட்டும் ஆங்கிலத்தில் நடத்தியது ஏற்புடையதல்ல. எனவே இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் தமிழன் பிரசன்னா ஆஜராகி வாதாடினார். பின்னர் நீதிபதி, ‘கணினி ஆசிரியர் தேர்வை தமிழில் ஏன் நடத்தவில்லை? என்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நாளை (வெள்ளிக்கிழமை) பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

6 comments:

 1. Comments y delete panunenga admin

  ReplyDelete
 2. Please Result வெளியிடுங்க,வெளியிட்டால் தான் Pass Or Fail தெரியவரும் எவ்வளவு Mark- னு தெரியவரும்,அடுத்து ௭ப்படி படித்தால் Mark ௭டுக்கலாம்னு யோசிக்களாம்,நீங்களோ தேர்வ Cancel பன்னிட்டு ந...........போங்க

  ReplyDelete
 3. One Weeks முன்னாடியே Hall Ticket-ல ஆங்கிலத்துல தான் தேர்வு நடக்கும்னு சொல்லிட்டாங்க,இப்ப Case போட்டவனெல்லாம் ஏன் தேர்வு ௭ழுதனும் ,தேர்வுக்கு முன்னாடியே Case போட வேண்டியதுதானே ௭னவே Result கட்டாயம் வெளியிடனும்,Computer exam தமிழ்ல ௭ழுதுவதுதான் கஷ்டம் (௭.கா) சரம்- String ,சரம்-னா தெரியுமா String-னா தெரியுமா,Ok மொத்தமா Case போட்டுட்டு ௭ல்லோரும் ந......போங்க

  ReplyDelete
 4. தமிழா,ஆங்கிலமா????
  இதைவிட முக்கியமான ஒன்று..
  Online exams என்று கூறி
  Offlineனில் நடந்தது..
  Online என்பதற்காக விளக்கம் தயவுசெய்து யாருக்காவது தெரிந்தால் கூறவும்...
  அறிவுக்கு எட்டிய வரை onlineஎன்றால் ஒரே நேரத்தில் logoin செய்து ஒரே நேரத்தில் தேர்வை முடிப்பது...
  ஆனால் நடத்ததோ இஷட்டத்திற்கு login செய்ய வைத்து கடனுக்கு கட்டி பணத்திற்கு systemத்தில் அமரவைத்து கண்டநேரத்தில் தேர்வைநடத்தி முடிக்கப்பட்டது......
  குழப்பம், குளறுபடிகளின் உச்சமாக இருந்தால் தேர்வுநடத்தும் தகுதியை இழந்ததிற்குச் சமம்...
  தகுதி தேர்வு நடத்த இன்ன இன்ன தகுதியை முதலில் வரையறுத்து கொண்டு தகுதித்தேர்வைநடத்தவும்....

  ReplyDelete
 5. Online தேர்வை ஏன் நடத்துகிறோம்...

  Trb சொன்ன காரணங்கள்..
  1)விரைவில்... முடிவு வெளியிட
  2) பிரச்சனைகள் வராமல் இருக்க..

  இந்த இரண்டுமே... TRB நிகழ்த்திய மாதிரியே தெரியலையே!!!!

  இன்னும் computer instructor முடிவு வெளியிடவில்லை... நடத்திய தேர்விலும்... ஒழுங்காய்... மூன்று மணி நேரத்தில் முடிக்கவில்லை... அப்படி என்ன தான் இவனுங்க வேலை செய்யுறானுங்களோ???

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி