நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த  ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி ஈரோட்டில் நாளை தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2019

நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த  ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி ஈரோட்டில் நாளை தொடங்குகிறது


நீட், ஜெஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்த ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஈரோட்டில் நடத்தப்பட உள்ளன.இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப் பதாவது:

நடப்பு கல்வியாண்டில் நீட், ஜெஇஇ போன்ற அனைத்து வகை போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களைத் தயார்படுத்தும்பொருட்டு அரசு, அரசு உதவி பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சிக்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தலா 2 ஆசிரியர்கள் வீதம் 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி மாநிலம் முழுவதும் 320 முதுநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஈரோட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்.6, 7) நடத்தப்பட உள் ளன.பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களை பணியில் இருந்து இன்று (செப்.5) விடுவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும்.மேலும், கடந்த ஆண்டு பயிற்சியின்போது வழங்கப்பட்ட கையேட்டை உடன் எடுத்துவரவும், போக்குவரத்து செலவுகளை பெற்றோர், ஆசிரியர் கழக நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி