Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2019

Flash News : அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை இயக்குநர் உத்தரவு.


அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சார்ந்த பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அசையும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சொத்து விவரங்களில் தவறு இருந்தால் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.




9 comments:

  1. Tamil nattil ulla all mla and mp and all civil srrvices officer and judges ellarudaiya service registerlayum mudhalil sothu vivarangalai ezhuthunga appuram paavappatta government employee and all types of teacheraiyum ezhuthavum g o podungal

    ReplyDelete
  2. அப்படியொரு go வந்தால் அரசியல்வாதிகள் கூட உண்மையாக பதிவு செய்வர்..

    ReplyDelete
  3. Arasiyal vathikitta unga judge court powera kattunga anga than uzhal adigan , anga unga power edubadadu sir

    ReplyDelete
  4. வர வர நமது நாட்டு நீதி அரசர்கள்....................கோடிட்ட இடங்களை நிறுத்துக . சரியான பதிலுக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. லோன் வாங்கியதையும் குறிப்பிடவும்.

    ReplyDelete
  6. வாத்தியார் மட்டும்தான் நாட்டுல இளிச்சவாயன் எந்தசட்டம் வேண்டுமானாலும் போடலாம்.கேட்க நாதியில்லை.சட்டத்துறைக்கு ஏன் இவ்ளொ கார்டு.

    ReplyDelete
  7. அரசியல்வாதிகளும் அரசாங்க ஆளுக தான அவங்களுக்கும் இந்த அரசு கட்டளை பொருந்தும்னு சொல்லுங்க அதுக்கப்புறம் எவனும் அரசியலுக்கு வர மாட்டான் நீர்த்தித்துறை நாட்டில் உள்ள குற்றங்களை முதல ஒழிங்க.....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி