Group 2 - தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது ஏன்? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் - kalviseithi

Sep 29, 2019

Group 2 - தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது ஏன்? டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தி வரும் குரூப்-2, குரூப்-2ஏ தேர்வு முறை, பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள்கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்வு முறை மாற்றம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் கே.நந்தகுமார் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து சிறப்பான பாடத்திட்டம் வகுக்கக்கப்பட்டு உள்ளது. இதுவரை இருந்த பாடத்திட்டமானது, முதல்நிலை எழுத்துத்தேர்வில் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் என்று இருந்தது.சுமார் 60 சதவீத மாணவர்கள் அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்து எழுதி வந்தார்கள். 40 சதவீதம் பேர் மட்டுமே தமிழை தேர்வு செய்தார்கள். அந்தவகையில் 60 சதவீதம்பேர் தமிழே தெரியாமல் தேர்வில் தேர்ச்சி பெறும்நிலை இருந்தது. தற்போது அந்த முறை நீக்கப்பட்டு உள்ளது.தமிழ் தெரியாமல் இனி அரசு வேலைக்கு செல்லமுடியாது.

தற்போது மாணவர்களின் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களின் புகைப்படம் உள்ளது. ஆள்மாறாட்டம் போன்ற முறைகேட்டை தடுக்க எதிர்காலத்தில் பயோ-மெட்ரிக் முறையைகொண்டுவர தேவையான நடவடிக்கைகளை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

8 comments:

 1. Maappillaiyoda seepa olichita kalyanam ninnudum. 😜

  ReplyDelete
 2. அடப் பாவிகளா???????

  இப்படிச் சொன்னாலும் தமிழன் நம்புவானா.....

  ReplyDelete
 3. Gr 2 2a தேர்வுக்கு யாருமே விண்ணப்பிக்காமல் தங்கள் எதிர்ப்பைக் காண்பிக்கலாம்

  ReplyDelete
 4. Yarum apply pannama Iruka matanga

  ReplyDelete
 5. Very good decision may be in future everybody will forget importance of tamil and Tamil Nadu what a great thinking favour to people, this type of politician & decision makers we must excile from Tamil Nadu

  ReplyDelete
 6. Those who commenting bad on changes in syllabus are not having enough knowledge in english to translate, they only want tamil part to get pass mark, but see the difference, before that a candidate can take either Tamil or English,no tamil is required for tnpsc. Now the case is different, only those who knows tamil alone can apply tnpsc group 2, this should be applicable to all competitive exams in tamilnadu.

  Language paper nu than solluvanga, athu tamil paper ila. Preliminary paper la tamil culture, thirukural elam include agiruku, summa tamil thookitanganu sollitu irukathinga. Mutta koo mathiri, ipdi pesuravan elame tamil to english translation panna vakku illathavan than

  ReplyDelete
  Replies
  1. Nandhakumaraala neenga nondha kumaraa ji ??
   We all feel about ji

   Delete
 7. Main examலயும் எல்லாம் தமிழ் என்று கொண்டு வாருங்கள்.
  எதற்காக ஆங்கிலம் , தமிழ் மொழி பெயர்ப்பு. நீங்க எங்களை ஏமாற்றி விட்டீர்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி