PGTRB 2018 - முதுநிலை ஆசிரியர் தேர்வு: பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2019

PGTRB 2018 - முதுநிலை ஆசிரியர் தேர்வு: பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு

தமிழகத்தில் வரும் செப். 27-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள முதுநிலை ஆசிரியர் தேர்வின்போது பதற்றமான மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகிய தேர்வுகளுக்கு  1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.  2,144 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.  இவர்களுக்கான எழுத்துத் தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்படவுள்ளது. இதில், முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆன்-லைன் தேர்வு வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வு தமிழ்நாடு முழுவதும் 154 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில், அதிகபட்சமாக தமிழ்ப் பாடத்தை 33 ஆயிரத்து 702 பேரும், ஆங்கிலப் பாடத்தை 32 ஆயிரத்து 387 பேரும், வேதியியல் பாடத்தை 14 ஆயிரத்து 502 பேரும். வணிகவியல் பாடத்தை 14 ஆயிரத்து 862 பேரும், இயற்பியல் பாடத்தை 14 ஆயிரத்து 372 பேரும், இந்திய கலாசார தேர்வினை 11 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் சில நாள்களில் நடைபெறவுள்ள இந்தத்தேர்வுகளுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, அதிகாரிகள் கூறுகையில்,  கடந்த ஜூன் மாதம் முதன்முறையாக நடைபெற்ற பள்ளி ஆசிரியர் பணிக்கான தேர்வின்போது, தேர்வு மையத்தில் தேர்வர்கள் சிலர் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனவே, இத்தேர்வில் அவற்றை தவிர்க்கும் நோக்குடன்,பதற்றமான மாவட்டங்களான கோயம்புத்தூர், நாமக்கல், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களிலுள்ள தேர்வு மையங்களில், கூடுதலாகப்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டக் காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

8 comments:

  1. Maths evlo members nu sollunga Sir

    ReplyDelete
  2. TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL START ON 13.10.19
    ADMISSION ON 6.10.19
    FOR CHEMISTRY MORE THAN 120 VACANCY
    CLASSES SATURDAY AND SUNDAY ONLY
    CONTACT 9884678645

    ReplyDelete
  3. TRB POLYTECHNIC CHEMISTRY CLASS WILL START ON 13.10.19
    ADMISSION ON 6.10.19
    FOR CHEMISTRY MORE THAN 120 VACANCY
    CLASSES SATURDAY AND SUNDAY ONLY
    CONTACT 9884678645

    ReplyDelete
  4. Commerce best coaching centre in. Madurai

    ReplyDelete
  5. Engalukku than pathattama irukku...

    ReplyDelete
  6. இங்க எல்லாம் buildup கொடுக்க வேண்டியது... அங்க evaluation பண்ணி... selection list வந்தா.. அதை cross check கூட செய்யாமல்.. அப்படியே பதிவேற்றிவிட்டு... பின்னாளில் பிரச்சனை வந்தால்... ஊடகத்திற்கும் தேர்வர்களுக்கும் எதுவும் தவறில்லை... OMR safeஆக இருக்கிறது என்று கூறிவிட்டு... courtல்.. ஜெயிக்க மட்டும் அங்கே ஏதேதோ கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவது...

    TRB.. உங்களை நம்பி.. என்.. 3 ஆண்டுகள் நாசமாகப் போனது... இனியும்.. பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்... ஏனெனில் இது 2000 பேருக்கான் வாழ்க்கை... NOT JUST A TECHNICAL GLITCH OR ADMINISTRATIVE PROBLEMS..

    ReplyDelete
  7. TRB ல exam attend panna, naanga dhan pathatta padanum.. ungalkenna

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி