PGTRB 2019 - தேர்வு முடிவு எப்போது? வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் ஏன்? - டிஆர்பி தலைவர் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 25, 2019

PGTRB 2019 - தேர்வு முடிவு எப்போது? வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் ஏன்? - டிஆர்பி தலைவர் விளக்கம்


தமிழகத்தில் முதல் முறையாக முதுநிலை ஆசிரியர் தேர்வு கணினி வழியில் நடத்தப்படுவது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கமளித்துள்ளார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் 27 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இந்தத் தேர்வை1.85 லட்சம் பேர் எழுத உள்ளனர்.இதற்கிடையே, முதுநிலை ஆசிரியர் தேர்வு முதல்முறையாக கணினி வழியில் (ஆன்லைன்) நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 154 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுக்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஆசிரியர் வாரியத்தின் தலைவர் ஜி.லதா, சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

முதுநிலை ஆசிரியர் தேர்வை 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் எழுத உள்ளனர். மொத்தம் 17 பாடங்களுக்கு காலை, மாலை என இருவேளைகளிலும் கணினிவழியில் தேர்வு நடைபெற உள்ளது. கணினிவழித் தேர்வு மிகவும் பாதுகாப்பானது. தேர்வு முடிவுகளை உடனே வெளியிட முடியும்.கண்காணிப்புக் கேமராக்கள்: இந்த தேர்வை முறைகேடின்றி நடத்த அதிகாரிகள் அடங்கிய மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை துறை இயக்குநர்கள் கண்காணிப்பர். அனைத்துமாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க, அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால், இந்தத்தேர்வில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. எனவே, தேர்வர்கள் தயக்கமின்றி தேர்வு எழுதலாம்.இதுதவிர, தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் பெருவிரல் கைரேகை வைத்த பிறகு தான் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். மேலும், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் உள்ள விதிமுறைகளைதேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து வரக்கூடாது. ஆண்கள் அரைக்கை சட்டை அணிந்து வருவது நல்லது. செல்லிடப்பேசி உட்பட மின் சாதனங்கள் கொண்டுவர அனுமதியில்லை.

தேர்வு முடிவு எப்போது?:

இந்தத் தேர்வு முடிவுகளை, நவம்பர் 2-வது வாரத்துக்குள் வெளியிடதிட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வு மற்றும் உதவி பேராசிரியர்கள் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்றார் அவர்.

வெளி மாவட்டங்களில் தேர்வு மையம் ஏன்?

தேர்வு மையங்கள் வெவ்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டது குறித்து டிஆர்பி தலைவர் ஜி.லதா செய்தியாளர்களிடம் கூறியது:

முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே கடைசியாக ஒதுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தேர்வு மையங்கள் வேறு வேறு மாவட்டங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில்கூட நியாயமான காரணங்கள் இருந்தால் கர்ப்பிணி பெண்கள், உடல் ஊனமுற்றவர்கள் போன்ற நியாயமான காரணங்கள் இருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் தேர்வு மையங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் தேர்வுமையங்களில் எண்ணிக்கையை அதிகரித்து இதுபோன்று தேர்வு மைய சிக்கல்கள் இல்லாமல் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு மையம் திட்டமிட்டுள்ளது என்றார்

19 comments:

  1. TRB POLYTECHNIC CHEMISTRY CLASSES STARTS ON 13.10.19
    CLASSES SATURDAY AND SUNDAY ONLY
    CONTACT 9884678645

    ReplyDelete
  2. TRB POLYTECHNIC CHEMISTRY CLASSES STARTS ON 13.10.19
    CLASSES SATURDAY AND SUNDAY ONLY
    CONTACT 9884678645

    ReplyDelete
  3. Why Late for PGTRB COMPUTER SCIENCE RESULT?

    ReplyDelete
  4. Apex Care Academy, Rasipuram
    Physics - Polytechnic TRB
    Admission going on.....
    Material Available
    Mobile : 8807432425

    ReplyDelete
  5. Best pg Zoology center irundha sollunga sir

    ReplyDelete
  6. Exam panala athukula result eppo nu solranga aana computer science finish pani four month's aahu innum result varala

    ReplyDelete
  7. Anybody know about computer science results

    ReplyDelete
  8. Any Material available for PGTRB Chemistry Polytechnic Lecturer

    ReplyDelete
  9. Physics _ polytechnic trb
    Admission going on
    Mobile 8807432425

    ReplyDelete
  10. csir & slet exam for chemistry going on also for polytechnic trb exam for chemistry..one model free class will be..if u satisfied may joint inthe regular classes..fees rs 15000 with materials+50 model tests..contact my id svakpyau11@gmail.com

    ReplyDelete
  11. ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அவர்களுக்கு நான் முதல் வாரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தேன் என்னுடைய நண்பர் 3வது வாரத்தில் விண்ணப்பித்தார் அவர் கேட்ட 3 தேர்வு மையங்களில் ஒதுக்கப்பட்டுள்ளது ஆனால் எனக்கு மட்டும் நான் கேட்ட 3 தேர்வு மையங்களில் ஒன்று கூட தேர்வு ஒதுக்கவில்லை இதில் இங்கே

    ReplyDelete
    Replies
    1. இதில் எங்கே வந்தது முன்னுரிமை?

      Delete
    2. Enakum athe than...
      Ivanga istathuku podranunga.. rrb is far better than tn trb, better they can close trb and let cbse or rrb to conduct exams for tn recruitment

      Delete
  12. Ennada pesura Iva, mental ah aparam Enna ithuku ne 3 option kuduthu, athan ippa enga question, option kudukala Chennai, trichy,covai nu poda vendiyathu thaney?

    ReplyDelete
  13. Latha pesama iru, atha vittu periya vengaya mayeru Mari velakam kuduthu aparam avlo than

    ReplyDelete
  14. We're looking for kidney for the sum of $500,000.00 USD,CONTACT US NOW ON VIA EMAIL FOR MORE

    DETAILS.
    Email: healthc976@gmail.com
    Health Care Center
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி