TET தேர்வில் தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை உயர்வு எதிரொலி தலைமை வட்டார வள மையமாகும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2019

TET தேர்வில் தேர்ச்சி பெறாதவர் எண்ணிக்கை உயர்வு எதிரொலி தலைமை வட்டார வள மையமாகும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எஸ்சிஆர்டியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் மாவட்ட தலைமை வட்டார வள  மையங்களாக மாற்றம் பெறுகின்றன. அதன்படி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் முதல்வர்கள், முதுநிலை  விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும்.அதில் குறைகள் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பயிற்சி நிறுவன முதல்வரும், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களுக்கு ஒரு ஒன்றியத்தை ஒதுக்கீடு செய்ய  வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு வேலைநாட்கள் அல்லது மாதத்தில் 16 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். கற்றல் உள்ளிட்ட பணிகளில் குறைகள் இருந்தால் வேறு ஆட்களை அனுப்பி,  தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் நிறுவன முதல்வர்கள் பள்ளி ஆய்வின் தொகுப்பு அறிக்கை மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன  இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு பாடப்புத்தகங்களில் பிழைகள் ஏதேனும் இருந்தால் அதுபற்றி ஆசிரியர்களிடம் கலந்தாலோசித்து இம்மாத இறுதிக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க  வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே, ஆசிரியர் பள்ளி  நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி