அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்! TET அடிப்படையிலேயே முரண்பாடுகள் களைய வேண்டும். - நாளிதழ் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2019

அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்! TET அடிப்படையிலேயே முரண்பாடுகள் களைய வேண்டும். - நாளிதழ் செய்தி

அதிக விழுக்காட்டில் ஆசிரியர் தேர்ச்சியுற வழி வகுக்கணும்!
- நாளிதழ் செய்தி


வ.லெட்சுமணன், அரியலுார், பெரம்பலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:


 பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு, 2011 முதல் கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில், ஆண்டுதோறும் நடத்தப்படும் தேர்வில், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில், நான்கு பிரிவுகளில், குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல், 30, தமிழ், 30, ஆங்கிலம், 30, கணிதம் மற்றும் அறிவியல், 30 அல்லது சமூக அறிவியல், 60 என, மொத்தம், 150 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

இந்த பாடத்திட்டத்தில் நடத்தப்படும், தாள் - 2 தேர்வில், குறைவான தேர்ச்சி விகிதங்களில், ஆசிரியர் தேர்ச்சி பெறுகின்றனர். பள்ளிப்படிப்பை முடித்தவுடன், இளநிலை பட்டப்படிப்பில், முதன்மை பாடங்களை தேர்வு செய்து, பட்டம் பெறுகின்றனர். இந்த அடிப்படையில், இளநிலை கல்வியியல் பட்டம் பெற்று, பட்டதாரி ஆசிரியர் தகுதி பெறுகின்றனர். அவர்களின் முதன்மை பாடத்தின் அடிப்படையில், தகுதித் தேர்வை நடத்தாமல், பயிலாத பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது; இதில் கட்டாயம் மாற்றம் தேவை.

உதாரணமாக, தமிழ் மற்றும் ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்கள், சமூக அறிவியல் பாடத்தில் கேட்கப்படும், 60 வினாக்களுக்கு, எப்படி பதில் அளிக்க முடியும்! கணித பாட பட்டதாரி ஆசிரியர், உயிரியல் பாடத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு எப்படி விடையளிக்க முடியும்? தற்போது பின்பற்றப்படும் பாடத்திட்டத்தை நீக்கி, பட்டதாரி ஆசிரியரின் மொழியறிவு, உளவியல், அவர்களது முதன்மைப் பாடம் என்ற மூன்று பிரிவுகளின் அடிப்படையில், தேர்வு நடத்த வேண்டும்.

மொழி அறிவு சம்பந்தமான, 30 வினாக்கள், உளவியல், 30 வினாக்கள், முதன்மைப்பாடத்தில், 90 வினாக்கள் என, மொத்தம், 150 வினாக்கள் என்ற முறையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். வருவாய் நோக்கத்திற்காக, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தேர்வு நடத்தாமல், தகுதித் தேர்வில், அதிக விழுக்காட்டில், ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவதற்கான, முதன்மை பாடத் திட்டத்தில் தேர்வு நடத்த வேண்டும்!

8 comments:

  1. அதெல்லாம் அதிகமாதான் பாஸ் செய்வாங்க எப்போது என்றால் 1000 மாவது காலி பணியிடம் என்று சொல்லிட்டு டெட் மதிப்பெண் அடிப்படையில் அல்லது பழைய தேர்வு முறை ஏதேனும் ஒன்றின் மூலம் உடனடி பணி நியமனம் என்று சொல்லிட்டு வைங்க தான் பாஸ் பன்னிடுவாங்க சும்மா கடமைக்குடெட் வெச்சா கடமைக்குதான் தேர்வு எழுதுவாங்க. வேலையே கிடைக்காது என தெரிந்தபின் எவனாவது கடினமா படிச்சி தேர்வு எழுதுவானா ?

    ReplyDelete
  2. Iam tet 2013 passed candidate .no posting. Tet exam cancel pannuga. New .method konduvanga . tet study pannara students life ? Exam vaithallum no posting.

    ReplyDelete
  3. We know very well that there is surplus teachers in the govt. school and there is no grantee for posting people those cleared TET 2003 on wards waiting for posting and minister is told that there will be another test for TET cleared people. on what basis or on what confident people will prepare for TET exam. IF you tell after TET cleared there will be confirmed for posting then 71 % people will get passed the TET. There is no guarantee for posting. People loosing their interest for preparing the exams.

    ReplyDelete
  4. That is the reason for people get failed the TET Exams.

    ReplyDelete
  5. சரியான நெத்தியடி,பாடத்திட்ட அமைப்பு
    வருமானத்திற்கா?
    குடும்ப உறுப்பினர்களுக்காக
    பங்கேற்பு,பரிதவிப்பு,படபடப்பு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி