TNPSC - குரூப் 2 முதல்நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2019

TNPSC - குரூப் 2 முதல்நிலைத்தேர்வில் மொழித்தாள் நீக்கம்!


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பல்வேறு நிலைத் தேர்வுகளை நடத்துகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது.

குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் பங்குபெற பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதுமானது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் இருக்கும். நீங்கள் விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.இதேபோன்று குரூப் 2ஏ தேர்வானது பல்வேறு துறைகளில் உதவியாளர், கிளார்க், ஸ்டெனோ - டைபிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு நடத்தப்படுகிறது. இதில், மூன்று நிலைகள் அல்லாமல் ஒரே ஒரு போட்டித் தேர்வு மட்டுமேநடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது.இந்த நிலையில், குரூப் 2 தேர்வில் மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்தாண்டு நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு முறையில் சில மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்நவகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொதுஅறிவு வினாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

8 comments:

  1. Apadi podu aruvaala...
    Cycle gap.la kada vettiyachu...

    ReplyDelete
  2. 100 Tamil kelviya keezhadi.la potu pudhaichachu...
    Patel pande Sharma velaikku Vara kuppusamy muniyandi pass pannakudadhu... Nalla thittam... Arumai...

    ReplyDelete
  3. Dai Nasamapovingada , intha syllabus ready pannavan,athai veliyittavan ellorum seekiram tengu vanthu saaveingada.

    ReplyDelete
  4. Hindi karanukku exam easy panrananuga......

    ReplyDelete
  5. Apparam TNPSC Exam india la enga venum nalum ezuthalam nu solluvanga.....

    ReplyDelete
  6. This method is not good for tamilnadu students,because many students very well prepared in tamil.Better change the syllabus,In tamil 150 Que,Job related 25Que,Mental ability 25 Que,Total 200 question.When change the TN government then only everything is possible.Any way,ALL IS WELL.👍

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி