TNPSC group 4 answer key: விடைக் குறிப்புக்கு எதிராக ஆட்சேபனை எழுப்புவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2019

TNPSC group 4 answer key: விடைக் குறிப்புக்கு எதிராக ஆட்சேபனை எழுப்புவது எப்படி?


TNPSC group 4 answer key: தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை அதற்கேற்ற ஆவணங்களுடன் இணைக்க வேண்டும், அத்துடன் ஆட்சேபனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும்


TNPSC Group 4 answer key: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான விடைக் குறிப்பை சமீபத்தில் வெளியிட்டது. தேர்வர்கள் answer key எனப்படும் விடைக் குறிப்பு டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
செப்டம்பர் 1 அன்று நடத்தப்பட்ட இத்தேர்வில், விடைக் குறிப்புக்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 17 ஆகும். விடைத் தாளில் முரண்பாடு இருந்தால், அனைத்து வேலை நாட்களிலும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தின் கட்டணமில்லா எண்ணான 1800 425 1002 காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அழைக்கலாம் அல்லது contacttnpsc@gmail.com ஐடிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

TNPSC Group 4 Answer key: டவுன்லோட் செய்வது எப்படி?

tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
முகப்புப்பக்கத்தில், ஸ்க்ரோலிங் இணைப்பான ‘டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைக் குறிப்பு’ என்பதை கிளிக் செய்க.
Subject-ல் க்ளிக் செய்யவும்.
லாக் இன் செய்து உள்ளே சென்று, answer key-ஐ பார்க்கலாம்.

TNPSC குரூப் 4 விடைக் குறிப்பு: ஆட்சேபனை எழுப்புவது எப்படி?

தேர்வர்கள் answer keyக்கு எதிராக ஆட்சேபனை எழுப்ப விரும்பினால் ‘click here to challenge’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். முகப்புப்பக்கத்தில், ஸ்க்ரோலிங் இணைப்பான ‘டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைக் குறிப்பு’ என்பதை கிளிக் செய்த பிறகு, நீங்கள் ஆட்சேபனை எழுப்பலாம்.
தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை அதற்கேற்ற ஆவணங்களுடன் இணைக்க வேண்டும், அத்துடன் ஆட்சேபனைக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ஆட்சேபனை தொடர்பான அனைத்து ஆவணங்களும் 3 எம்பிக்கு குறைவான PDF ஆக மாற்றப்பட வேண்டும். இறுதியில், எதிர்கால தேவைக்காக ஒப்புதல் சீட்டை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி