2,331 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. கடைசி நாள்: 30.10.2019 - kalviseithi

Oct 5, 2019

2,331 உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. கடைசி நாள்: 30.10.2019


தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுக்கு நேற்று முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 30-ந் தேதி ஆகும். முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும். அறிவிப்பினை முழுமையாக படித்து உரிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்ற பின்னர், விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும் இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி