அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு: முதல்கட்டமாக 4,560 பேர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2019

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா ஏற்பாடு: முதல்கட்டமாக 4,560 பேர் தேர்வு


அரசுப் பள்ளி மாணவர்களை அண்டை மாநிலங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்கட்ட மாக 4,560 பேர் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முதல்கட்டமாக படிப்பில் சிறந்து விளங்கும் 4,560 மாணவர்கள் சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மத்திய அரசின் ‘ராஷ்டிர அவிஷ்கார் அபியான்’ திட் டத்தின்கீழ் அரசுப் பள்ளி மாண வர்கள் அண்டை மாநிலங் களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள் ளனர்.
அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பில் சிறந்த 960 பேர், 9-ம் வகுப்பில் சிறந்த 3,600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து 4 மண்டலங்க ளாக பிரிக்கப்பட்டு திருவனந்த புரம், மைசூர், திருப்பதி, ஹைதராபாத் ஆகிய இடங் களுக்கு 3 நாள் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப் படுவார்கள். இதற்கு ரூ.72 லட்சம் நிதி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐஆர்சிடிசி) இணைந்து ரயில், பேருந்து மூலம் ஆசிரியர்களுடன் சேர்ந்து சுற்றுலா செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், சுற் றுலா செல்லும் மாணவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெற்றோரின் உரிய அனுமதி பெற்ற பின்பே மாணவர்களை சுற்றுலா வுக்கு அழைத்துச் செல்லவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது ’’என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி