தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்


தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.வரும் 18ம் தேதி வரை தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் உள்கர்நாடகா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்குவாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.2 நாளில் விலகல்தென்மேற்கு பருவமழைஇது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி நேற்று கூறுகையில், "தென்மேற்கு பருவ மழை வடக்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

வங்கக்கடலின் அதிக பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவ மழை விலக்கி கொள்ளப்படும். இதேபோன்று வடக்கு அரபிக்கடலில் மீதமுள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு நாட்களில் படிப்படியாக திரும்பப்பெறப்படும்.

17ம் தேதி ஆரம்பம்

வடகிழக்கு பருவ மழை

இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அக்டோபர் 17ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

வெப்பச்சலனம்

இன்று பலத்த மழை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.

சென்னையில் மழை

நேற்று இரவு மழைஇதனிடையே சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, வேளச்சேரி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தியாகராயநகர், அசோக்நகர், மதுரவாயல்,உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு நல்ல மழை பெய்தது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி