எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வு மூலமே நடத்தப்படும் - kalviseithi

Oct 7, 2019

எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வு மூலமே நடத்தப்படும்


அடுத்த ஆண்டு (2020) முதல் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரி வித்தார்.

தற்போதைய நிலையில், எய்ம்ஸ், ஜிப்மர் தவிர அனைத்து மருத்துவக் கல் லூரிகளிலும் நீட் தேர்வு அடிப்படையி லேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படு கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச் சகத்தின் கீழ் இயங்கும் அந்த இரு மருத் துவக் கல்லூரிகளும் மாணவர்ச் சேர்க் கைக்கு தனியே நுழைவுத் தேர்வு நடத்தி வருகின்றன.

இதுதொடர்பாகதில்லியில் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற தேசிய அளவில் முக்கியத்து வம் வாய்ந்த மருத்துவக் கல் லூரிகளிலும் அடுத்த கல்வி யாண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையிலேயேமாண வர்ச் சேர்க்கை மேற்கொள் ளப்படும். மேலும், தேசிய மருத்துவ ஆணையச் சட்டத் தின் கீழ், மருத்துவப் படிப் புக்கு பொதுக் கலந்தாய்வு நடத்தப்ப டும். நாட்டில் மருத்துவக் கல்விக்கென பொதுவான தரக் கட்டுப்பாடுகளை ஏற் படுத்த இது உதவும். அதேபோல், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின் கீழ், எம்.பி.பி. எஸ் படிக்கும் மாணவர்களுக்கு இறுதி யாண்டில் பொதுத் தேர்வு (நெக்ஸ்ட்) ஒன்று நடத்துவதற்கான முறைகள் பரிசீ லிக்கப்பட்டு வருகின்றன. அந் தத் தேர்வு அமலுக்கு வர இன் னும் 3 ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. எம்.பி.பி.எஸ் முடிக்கும் மாணவர்கள் முதுநிலை மருத் துவம் படிப்பதற்கான தகு தித் தேர்வாகவும், மருத்து வராகப் பணியாற்றுவதற்கு தொழில் உரிமம் பெறும் தேர் வாகவும் இந்த நெக்ஸ்ட் தேர்வு இருக் கும்.

மேலும், வெளிநாட்டில்மருத்து வம் பயின்ற மாணவர்கள் இந்தியாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான அனுமதித் தேர்வாகவும் இது இருக்கும். முதுநிலை மருத்துவப் படிப்புக்காக முயற்சிக்கும் மாணவர்கள் தங்களது தர வரிசையை அதிகரித்துக் கொள்வதற் காக எத்தனை முறை வேண்டுமானாலும்நெக்ஸ்ட் தேர்வு எழுத அனுமதிக் கப்படுவர். நெக்ஸ்ட் தேர்வு மூலம் ஒரு மாணவர் பல கல்லூரிகளில் நடைபெ றும் மாணவர்ச் சேர்க்கையிலும், பல் வேறு கலந்தாய்வுகளிலும் பங்கேற்க வேண்டிய அசௌகர்யம் குறைக்கப்பட் டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்துக் கான உறுப்பினர்களை பரிந்துரைக்கு மாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர் கள், உள்துறைச் செயலர்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட பரிந் துரைகளில் இருந்து ஆணையத்துக் கான உறுப்பினர்களைத் தேர்வு செய்வ தற்கான குலுக்கல் வரும் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி