அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2019

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில்(EMIS), அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக EMIS இணையதளத்தில் Teachers Children details என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பக்கத்தில், உங்கள் பிள்ளைகள் யாராவது அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா என்று கேட்கப்பட்டிருக்கும். அதை தேர்வு செய்தால் ஆமாம், இல்லை, பொருந்தாது என்று 3 வகை தேர்வு வாய்ப்புகள் இருக்கும் வகையில் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும். திருமணம் ஆகாதவர் அல்லது பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்துள்ளவர்கள் எனில் பொருந்தாது என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும். அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் உடனடியாக கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து அதை பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

34 comments:

  1. தமிழக அரசியல் கட்சியை சேர்ந்த பிரபல நிர்வாகிகளின குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள் என்ற விவரமும் பதிவு செய்தால் தெரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Here we cannot compare politicians and government employees...politicians will have only five years but for govt.employees????

      Delete
    2. நான் 5 வருஷம் மக்களுக்கு உழைத்துவிட்டேன் இனிமேல் அரசியலில் இல்லை என்று சொல்லும் ஒருவராவது இருப்பார்களேயானால் அவரது பெயரை இங்கே பதிவிடவும்.

      Delete
    3. சரியான கேள்வி...

      Delete
    4. So we can send out government employees after 5 year..then again they will have to GO for competitive exam for employees will it be ok???

      Delete
    5. Get salary from government..but paying private schools for their kids education it is really pathetic..

      Delete
  2. Correct...பள்ளிக்கூடம் அனைத்து வசதிக ளுடன் இருந்தால் மக்கள் எப்படி தனியார் பள்ளிகளை நாடிச் செல்வார்கள்? அரசின் கல்விக்கான நிதியை விடுங்கள்...அரசு தனியார் பள்ளிகள் போல் அல்லாமல் ஒரு மாணவனுக்கு 100ரூ கட்டணம் வாங்கி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கலாம்.இலவசங்களைக் குறைத்து பள்ளியின் தரத்தை உயர்த்தினால் அனைவரும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை...இது என் கருத்து.

    ReplyDelete
    Replies
    1. எதுவும் இலவசம் இல்லை.அந்த வசதி இல்லாத கிராமப்புற பிள்ளைகளுக்கு அரசு வழங்குகிறது.இதில் எத்தனை பேர் லட்சங்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு ரேசன் சீனி வேண்டாம் கேஸ் மானியம் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.

      Delete
  3. First step govt. Employees next we will move on to politicians

    ReplyDelete
    Replies
    1. Ramj...... U just stop it.... They targeted teachers only...

      Delete
    2. Yes bro teachers government needs to be targeted because they are the responsible community for all these private school pounders..

      Delete
  4. அதிகாரம் உங்களிடம் தான் உள்ளது.
    அரசு பள்ளிகளை உலகத்தரத்துக்கு உயர்த்துங்கள் ...
    பிறகு தானாகவே சேர்க்கை அதிகரிக்கும்

    ReplyDelete
  5. அரசு பள்ளியில் படிக்கிறார்களா என்ற கேள்வி மட்டுமன்றி ஏன் சேர்க்க விரும்பவில்லை என்ற கேள்வியும் கேட்டு அந்த கேள்விக்குக் கிடைக்கும் பதில்களை ஆராய்ந்து அவற்றைச் சரிசெய்தால் அரசு பள்ளி மட்டுமே நம் மண்ணில் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து

    ReplyDelete
    Replies
    1. இதில் என்ன கேள்வி பதில் இனிமேல் நம்ம நாட்டில் தனியார் பள்ளிகளே கிடையாது என்று மோடிஜி ஒரே நாளில் கையெழழுத்து போடலாமே. நம்ம நாடு தான் ஒரே நாடு ஒரே தேசமாக உள்ளதே.

      Delete
    2. Government job mattum venum but unga pasanga private school padikkanum ..govt school vela seyyir dash ellam olunga vela senja yenda ella private school thedi poranga vennaingala......

      Delete
  6. Oru manavanin padippu avan kailthan iruku..palliyin kaiyil illai.....

    ReplyDelete
  7. First implement all government employees children's should be studying in government school only, Because many of the Government Employees are studied in government school only,always government school children having very good knowledge,So please implement this method for all Tamilnadu government employees 👍

    ReplyDelete
  8. அரசு பள்ளி ஆசிரியர்கள் வீட்டிலிருந்து 10 முதல் 20 கி மீ தூரத்தில் பணி செய்கிரார்கள் எனவே வீட்டை விட்டு 7 மணிக்கே பணிக்கு செல்ல வேண்டும்.அவர்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்புக்காக அரசு பள்ளிகள் வேன் வசதி செய்து கொடுத்தால் எங்கே வேண்டுமானாலும் சேர்க்கத்தயார்.பஸ்பாஸ் இருக்கே என்று கூரலாம் ஆனால் பஸ்டாப் வரை பஸ் ஏற்றிவிடவே நம்பகமானவர்கள் இல்லையே.

    ReplyDelete
    Replies
    1. Then what about people working in private sector with very thin salary...How could they give education and safely to their kids.

      Delete
    2. Y u are working very thin salary.... U may go to very high paying job... Useless people like u... working in public sector.... U blamed us.... Mooditu poi velaiya paaruda naaye

      Delete
    3. I don't know who you are brother.the way you talk really show how badly you are nurtured..you understand what I mean....

      Delete
  9. அரசியல்வாதிகள் ஐந்து வருடம் மட்டுமே ஆட்சியிலுள்ளார்கள் ஆனால் அரசுப் பணியாளர்கள் அப்படியா இல்லை....

    ஐந்து வருடத்திற்கு ஓய்வூதியம் உண்டு

    ஆயுசு முழுக்க ஓய்வூதியம் கிடையாது...

    ReplyDelete
  10. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்

    view scores
    https://docs.google.com/spreadsheets/d/1_NjjziYKALXUgcXxP7MSKqL3WkUkJ-6_8wC-FYgvbaw/edit#gid=1360221443

    ReplyDelete
  11. Intha arivalikku puriyavillai. Pillaikalukku example eppadi thandaiyo athai polathan govt employeskku arasu. So mudalil?

    ReplyDelete
  12. Avargal pillaigal CBSe,matriculation irupanga poi pallikalviyel velaya parunga,,,,ungala innum seya mudyathu...

    ReplyDelete
  13. அரசு கொடுக்கும் அனைத்து இலவசங்களையும் வாங்கிக்கொண்டு அரசுக்கு விசுவாசமாக இல்லாமல் தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் வங்கிகளுக்கும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய அனைவரையும் நாம் என்ன சொல்லுவது..... அதற்காக அரசுக்கு அவர்கள் நன்றி இன்மையை காட்டுவதாக எடுத்துக் கொள்ளலாமா.....

    ReplyDelete
  14. ஆமா இவனுங்க மட்டும் அரசு வேலை பார்ப்பானுங்க ஆன புள்ளைங்கள பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைப்பானுங்க ....லூசு பு

    ReplyDelete
    Replies
    1. Mr.unknown அவர்களே லூசு பு என்பது தங்களின் பெற்றோர் தங்களுக்கு இட்ட இயற்பெயரா?

      Delete
  15. நுங்கு தின்றவர்கள் தப்புவதும், நோண்டி தின்றவர்கள் மாட்டுவதும் இயற்கை.

    ReplyDelete
  16. Idhellam romba too too much
    By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி