எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.


தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் தகுதியான எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் 12 வாரங்களில் மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர்கல்விக்காக மத்திய அரசின் உதவியுடன் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழகஅரசு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், கடந்த 2018-19 கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக் கூடாது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு இதுதொடர் பாக சுற்றறிக்கை பிறப்பித்தது.

இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக் கோரி தென்காசியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘கடந்த 2018 19 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர் கள் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள நிலை யில், அவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தர மறுப்பது சட்டவிரோதமானது. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் உள்ளன.

எனவே, அனைத்து எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரப்பட்டி ருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங் கிய அமர்வு, ‘‘தனியார் சுயநிதிபொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து 12வாரங் களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

1 comment:

  1. நிர்வாக ஒதுக்கீடு இல்லாம அரசு கோட்டால வர வேண்டியது தான, நீ டொனேசன் கட்டி சேருவ அதுக்கும் அரசாங்கம் அழுவனுமா..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி