அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2019

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மழைநீ்ர் தேங்காத வகையில் சுத்தகமாக பராமரிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அனைத்து பள்ளி வளாகங்களிலும் ஒவ்வொரு சனிக்கிழமையில் குப்பைகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவைகள் பள்ளி மாடிகளில் இல்லாதவாறு பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தருமபுரி, திருவள்ளூர், நெல்லை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதாகவும், 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பிரார்த்தனை நேரத்தில் டெங்கு, சிக்கன்குனியா, மலேரியாவை தடுப்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழமையான கட்டிடங்கள் இருந்தால் அகற்றவும் அதன் பட்டியலை அளிக்க ஆட்சியருக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி