பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க பட்டதாரிகள் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2019

பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க பட்டதாரிகள் வலியுறுத்தல்


தமிழகத்தில் அரசு கலை, அறிவி யல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன. இந்த பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண் ணப்பப்பதிவு கடந்த 4-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களையும் பதிவேற் றும் நடைமுறை முதன்முறை யாக செயல்படுத்தப்பட்டுள் ளது.

இதனால் அனைத்து சான் றிதழ் நகல்களையும் பதிவேற் றம் செய்த பின்னரே பட்டதாரி கள் விண்ணப்பிக்க முடியும்.மேலும், பட்டதாரிகளின் கல்வித் தகுதி மற்றும் பணி அனு பவத்துக்கு தனியே மதிப் பெண்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் தாங்கள் பணிபுரியும் கல்லூரி களில் அனுபவச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால், இந்த சான்றிதழ் தருவ தற்கு கல்லூரிகள் தரப்பில் மறைமுககட்டணம் செலுத்த வற்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.எனவே, இந்த விவகாரத்தில் கல்லூரி கல்வி இயக்குநர் தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.30 வரை அவகாசம் உள்ளதால் காலக் கெடுவை நீட்டிக்கவும் பட்டதாரி கள் வலியுறுத்தியுள்ளனர்.

17 comments:

 1. தேர்வு முறையே வெட்க்க்கேடானது. இதில் நீட்டிப்பு வேறயா.

  ReplyDelete
  Replies
  1. As per UGC, guidelines only followed by TRB, as per UGC& MHRD guidelines, from 2021 onwards PhD is compulsory for college level teaching jobs, SET/NET முடித்தவர்களுக்கும் கட்டாயமாக்குகிறது. வெட்கக்கேடு என்று சொல்லும் தாங்கள் தற்போது உள்ள விதி முறையை பின் பற்றி நுளைவு தேர்வையும், நேர்காணலையும் சந்தித்து PhD சேர்க்கை வாங்க முடியுமா உங்களால்? கல்லூரி கல்வி வேறு, பள்ளி கல்வி வேறு, பள்ளி கல்வியை மாநில அரசு நிதி நிர்வாகம் செய்கின்றன, இவற்றின் பணி நியமன முறையை மாநில அரசு முடிவு செய்ய முடியும் ஆனால் கல்லூரி கல்வியை பல்கலை கழக மானியக்குழு நிர்வாகம் செய்வதால், UGC&MHRD என்ன விதிமுறைகளை சொல்கிறதோ அவற்றை தான் மாநில அரசு பின் பற்றி ஆக வேண்டும்...அதே போல் Engineering & Polytechnique recruitment-ல் தேர்வு வைத்து தானே நிரப்ப படுகின்றன என வினா எனலாம், அதற்கு AICTE தகுதி தேர்வு முறையை வைத்துள்ளது அவற்றை மாநில அரசால் பின்பற்ற படுகிறது...இனி வரும் 2021 ஆண்டு முதல் முனைவர் பட்டம் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றை UGC கட்டாயமாக்குகிறது பேராசிரியர் பணி நியமனத்தில்...கல்லூரி விதி முறைகள் என்னவென்று தெரியாமலலே TRB யை குறை சொல்கிறார்கள், முதலில் இணைதளங்களுக்கு சென்று பாருங்கள் விதி முறை என்னவென்று புரியும்...எந்த காலத்திலும் Arts college TRB-க்கு தேர்வு இல்லை (UGC விதி முறை மாறும் வரை) வரும் 2021 முதல் UGC New Regulation-ல் UG, PG, Phil, PhD, Research Articles, Research Grants, conference presentation முறையே weightage marks அடிப்படையில் பணி நியமனம் நடைபெரும்...உங்களை போல ஒரே ஒரு தகுதி தேர்வை சந்தித்து பேராசிரியர் பதவிக்கு வர நினைப்பது தான் வெக்ககேடு...

   Delete
  2. Ok sir confirm job for you

   Delete
  3. I am already in govt job, no need again

   Delete
 2. சரியாக சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. என்ன ஒரு பேராசை...அதுவும் ஒரே ஒரு தகுதி தேர்வில் கல்லூரி பேராசிரியர், சம்பளம் 57000, As per UGC விதி முறைப்படி முன் பணி அனுபவம் இல்லாமல் எந்த காலத்திலும் தங்களுடைய பேராசிரியர் கனவு பலிக்காது...

   Delete
 3. exam is best
  every applicant will get chance

  ReplyDelete
 4. what happened to assistant professor case in high Court?

  ReplyDelete
 5. கடந்த பத்து ஆண்டுகளில் p.hd முடித்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்திருப்பதனால் எழுந்த சந்தேகத்தையடுத்து , அதன் தரத்தை ஆய்வு செய்ய UGC முடிவு செய்துள்ளது . ஆய்வை முடித்து விட்டு தகுதி இல்லாத p.hd பட்டத்தை cancel செய்து ,அதன் பிறகு notification செய்திருக்கலாமே .ஒரு கடைநிலை ஊழியர் பணி நியமனத்திற்கு கூட எழுத்து தேர்வு நடைபெறும் பெறும் போது , உதவி பேராசிரியர் பணிக்கு ஏன் விதி விலக்கு என்று நீதி மன்றம் விளக்கம் கேட்டிருக்கிறதே .நீதி மன்றம் நினைத்தால் மட்டுமே இந்த நேரடி நியமனத்தை தடுத்து நிறுத்த முடியும் .

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒரு அறிவிப்பு ஏதும் UGC வெளியிடவில்லை, சிறந்த ஆய்வு கட்டுரையை ஆய்வு செய்ய மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆய்வு நடைபெருகின்றன. அதற்கும் TRB அறிவிப்பிற்க்கும் என்ன சம்பந்தம்....ஒவ்வொரு முறையும் Arts college TRB-ன் போது பல வழக்குகள் நீதி மன்றங்களில் தொடுக்கப்படுகின்றன, ஏன் நீதி மன்றம் தகுதி தேர்வை நடத்த ஆணை பிறப்பிற்கபடவில்லை, பல்கலைக்கழக கொள்கை மற்றம் விதிமுறை முடிவை நீதி மன்றத்தால் மாற்ற இயலாது...அவற்றை UGC யால் மட்டுமே மாற்ற முடியும், UGC ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற மத்திய அமைப்பு.

   Delete
 6. I request trb please extend date because experience certificate very difficult to get in private institutions kindly consider trb board

  ReplyDelete
 7. https://www.thehindu.com/news/national/ugc-to-review-quality-of-phd-theses-over-10-years/article27277915.ece/amp/

  ReplyDelete
 8. நண்பரே, மேலே உள்ள link ஐ படித்து பாருங்கள். உயர் கல்வி தரம் குறைய முக்கிய காரணம் UGC என்பதை தங்கள் கருத்து மூலம் மறைமுகமாக ஒப்பு கொண்டுள்ளீர்கள். பல்வேறு புகார்களுக்கு பின்னரே ph.d mphil படிப்புகளுக்கு நுழைவு தேர்வு வந்தது. ph. d முக்கியம் என உதவி பேராசிரியர் பணிக்கு UGC கருதினால் நெட், செட் தேர்வுகள் நடத்த வேண்டிய அவசியம் என்ன நண்பரே?... ஒரே ஒரு தகுதி தேர்வு pass செய்து பேராசிரியர் பணிக்கு வர நினைப்பது வெட்கக்கேடு? என தாங்கள் கூறுவது பற்றி என்ன சொல்வது?. Ph.d கு தகுதி தேர்வில் விலக்கும் வழங்கிவிட்டு அதிக மதிப்பெண் வழங்கும் UGC யின் தவறை எவ்வாறு எடுத்துக்கொள்வது. உண்மையில் நெட், செட் மற்றும் Ph.d(இரண்டும்) உள்ளவர்களுக்கு அதிக மதிப்பெண் கொடுப்பதுதானே முறை. தற்போது கோருவது என்னவெனில், முதலில் போட்டி தேர்வு, அதில் வெற்றிபெறுபர்களுக்கு UGC படி அடுத்தகட்ட தேர்ச்சி இருக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கும் போதே தனக்கு தகுதி இருந்தும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது என்ன மாதிரியான தேர்வு? ஒரு நண்பர் Ph.d மற்றும் UGC நெட் என (கணிதம்) இரண்டும் தேர்ச்சி செய்து ஒரு போட்டி தேர்வு எழுதி புள்ளியில் துறையில் சாதாரண பதவியில் உள்ளார். அவர் பணி அனுபவம் இல்லாததால் Ph.d இக்கு 9 மதிபெண்ணும் நேர்காணலில் 10 மதிப்பெண் பெற்றாலும் மொத்தம் 19 மதிப்பெண்களை பெறுவார். பணி அனுபவம் 15 மதிப்பெண்கள் Ph. d 9 மதிப்பெண்கள் பெற்ற ஒருவர் நேர்காணலில் 0 மதிப்பெண்கள் பெறுகிறார் என வைத்து கொள்வோம். இவர் 24 மதிப்பெண்கள் மொத்தம் பெறுவார். இதில் பின்னவரே தற்போதைய முறைப்படி பணி ஆணை பெறுவார். பேராசிரியர்கள் மாணவர்களை போட்டி தேர்வுகளுக்கு தயார்படுத்த வேண்டும் என்பது பேராசிரியர் பணிகளுக்கு அரசு கொடுத்துள்ள கடமைகளில் ஓன்று. தாங்களே போட்டி தேர்வு எழுதாமல் தகுதி தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பீர்கள். Ph. d வரை பட்டம் பெற்றவர்கள் தங்களது பாடத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகளை எதிர்கொண்டு போட்டி தேர்வை வைக்க ஏன் எதிர்க்க வேண்டும்?. நெட், செட் தேர்வுகள் பல ஆண்டுகளாக உள்ளது. 2009 இக்கு முன்னர் m.phil படித்தவர்களுக்கு இதில் விலக்கு UGC ஆல் விலக்கு வழங்கப்பட்டது. ph.d இன் தரம் உலக அளவில் இல்லை என்பதால் மறு ஆய்வுக்கு இதே UGC ஆல் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலே உள்ள லிங்க் ஐ படிக்கவும். இதில் முழு குற்றவாளி UGC மட்டுமே. நெட் எக்ஸாம் முக்கியம் என்பதால்தான் அதை நீட் நடத்தும் NTA அமைப்பு நடத்துகிறது. ஆனால் Ph.d ஐ இன்று கல்லூரிகள் கூட வழங்குகின்றன. எனவே, ஒரு தகுதி தேர்வு இருப்பதால் அனைவரும் சமமான வாய்ப்பு பெறும் பொருட்டு முதலில் போட்டி தேர்வு பின் ugc வழி காட்டுதல் என கோரிக்கைகள் உள்ளன. ஆரோக்கியமான விவாதங்கள் செய்ய நான் தயார் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்து 100 சதவீதம் உண்மை .

   Delete
 9. This is not examine the PhD degree, the agency will check the quality of the thesis work that all, for that they are not cancelled any degree..those who are scoring 99 marks in SSLC, is best student, but your statement like those who are pass in SSLC is not qualified as SSLC...10 year thesis is not evaluation, just to examine best research work in global level...it's for just survey only, this is not applicable to employment, from the beginning onwards TRB appointed to college professor is like this method only..

  ReplyDelete
 10. So job seekers are not blaming to TRB, UGC, Higher Education, this rule already framed, Even every TRB call for, (2007, 2009, 2013)so many cases are filed against TRB, but no use to fighting, they know how to facing the public issues..The only thing is to improve our eligibility, they are giving preference to PhD & Experience mean, we have to gain it and will wait to our turn...I am not PhD/SET holder, its just my view

  ReplyDelete
  Replies
  1. Without any teaching experience how to handle the higher level students, this job needed some class room atmosphere, so Board will decide to keep this rule in long time for the collegiate education, in govt Engg col also preference is given to Experience hand, even they are writing eligibility exams...No one interrupted out Head rule, if the chances are for us, SET/NET/PhD is not a factor for job..

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி