காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2019

காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி!


காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரைக்கான, காலாண்டு தேர்வுகள், செப்., 23ல் முடிவடைந்தன.பின், ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்பட்டு, அக்., 3ல், பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும், அக்., 5 முதல், ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில், நாளை மீண்டும் பள்ளிகள் திறந்ததும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பின்தங்கிய மாணவர்களுக்கு, எந்த பாடத்தில் மதிப்பெண் குறைந்ததோ, அந்த பாடத்தில், காலை, மாலை நேர சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி, மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4 comments:

  1. முட்டாள்தனமானது

    ReplyDelete
  2. எவனும் அரசானை எண்ணோ , கடித எண்ணோ போட்டு சிறப்பு வகுப்பு எடுக்கச் சொல்லி வெளியிட மாட்டான்..
    இப்படி மறைமுகமாகத் தான் ஆணை வெளியிடுவான்.. இதனை ஆசிரியர்கள் செயல்படுத்தவேண்டும். பிரச்சினை வரும்போது ஆசிரியர் மட்டுமே பொருப்பேற்க வேண்டும். இந்த உயர்அதிகாரி எனக்குத் தெரியாது என ஒதுங்குவது மட்டுமல்லாமல் உன்னை யார் சிறப்பு வகுப்பு எடுக்கச்சொன்னது என்று நம்மிடமே கேட்டு நமக்குத் தண்டனை வழங்குவார்கள்.
    இந்த முகமூடி கொலைகாரர்கள் (கல்வி அதிகாரிகள்)

    ReplyDelete
  3. TRB தேர்வர்கள் தங்களது மதிப்பெண்களை இங்கே தெரிவிக்கும்பட்சத்தில் நாம் தோராயமான மதிப்பெண்களை ஒவ்வொரு பாடத்திற்கும் கணக்கிட முடியும்

    for entering marks
    https://docs.google.com/forms/d/11zwTe4ePUvnjFF48ZiPVly77Zbo_-KklnfEUIp3WK_0/edit

    view scores
    https://docs.google.com/spreadsheets/d/1_NjjziYKALXUgcXxP7MSKqL3WkUkJ-6_8wC-FYgvbaw/edit#gid=1360221443

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி