விவசாய கைத்தொழில் ஆசிரியர் (தோட்டக்கலை ஆசிரியர்) பணி வழங்க கோரிக்கை! - kalviseithi

Oct 15, 2019

விவசாய கைத்தொழில் ஆசிரியர் (தோட்டக்கலை ஆசிரியர்) பணி வழங்க கோரிக்கை!

அனுப்புதல்
         ரெ.காௌஞ்சியப்பன்.,
         த/பெ: ரெத்தினம்,
         3/465,மெயின் ராேடு,
         ராமசாமிகட்டளை,நரசிம்மபுரம்,
         புள்ளபூதங்குடி(அஞ்சல்),
         பாபநாசம்(வட்டம்),
         தஞ்சாவூர்(மாவட்டம்)
         அ.கு.எண்:612301.

பெறுதல்:
           மாண்புமிகு தமிழக                                 முதலமைச்சர் அவர்கள்,
           தலைமைச்செயலகம்,
           சென்னை.

ஐயா,
                 பொருள்: பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் T.T.C( விவசாயம்) Technical Teacher Certificate(தொழிலாசிரியர் பயிற்ச்சி) படித்தவர்களுக்கு பணிநியமனம் வேண்டுதல் தொடர்பாக.

தற்பொழுது பள்ளிகளில் சிறப்பாசிரியர்கள் நியமனத்தில் T.T.Cஓவியம்,T.T.Cஇசை,T.T.Cதையல் படித்தவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் T.T.C (விவசாயம்) படித்தவர்களுக்கு பணி நியமனம் மறுக்கப்பட்டு வருகிறது.பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்ததில் "T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது என்பது அரசின் கொள்கைமுடிவுக்கு உட்பட்டது" என்றும் "தங்களது கோரிக்கை அரசு ஆணையின்படி ஏற்க்க இயலாத நிலையில் உள்ளது"என்றும் பதில் தந்துகொண்டு இருக்கிதுறார்கள்.மத்திய அரசின் அணைவருக்கும் கல்வி திட்டத்தில்(S.S.A) "பகுதிநேர தொழிலாசிரியர்" நியமனத்தில் "தோட்டகலை" பாடம் இடம் பெற்று இருந்தது.பள்ளி கல்வி இயக்குனர் T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு இருக்கும் பணி நியமனத் தடையை நீக்கம் செய்து தரும்படி பள்ளி கல்வி செயலாளர்க்கு கருத்துறு அனுப்பிருந்தார்கள் அதற்க்கு "பள்ளி கல்விச் செயலாளர்" ,இயக்குனர்க்கு அனுப்பிய கடிதத்தில் கீழ்கண்டவாறு பதில் அளித்திருந்தார்கள். ஆதாரம் (கடித எண்:36733/எம்.1/2010-.நாள் 16.05.2012)
"1.பார்வையில் கானும் கடிதங்களின் மீது தங்களின் கனிவான கவனம் ஈர்க்கப்படுகிறது. 2.கல்வி உரிமைச்சட்டம்(RTE Act) நிர்ணயித்துள்ள நெறிமுறைகளுக்கேற்ப நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலைக்கல்வி(Work Education) பகுதிநேர ஆசிரியர் பணியிட தேவை 5904 என நிர்ணயிக்கப்பட்டு அணைவருக்கும் கல்வி திட்டத்தின்(SSA)கீழ் பணியிடம் மற்றும் அதற்கான நிதி(ரூ.17.71கோடி) 2011-12 ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தில் (Annual Work Plan &Budget) ஒதுகக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 6,7,8 ஆம் வகுப்புகளுக்கான வேளாண்மை,நெசவு மற்றும் மரவேலை தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேவை இல்லை எனக் கருதலாம்."தற்போது தொழிற்கல்வி ஆசிரியர் பணி நியமனத்திற்காக காத்திருப்போர் மேற்சொன்ன பகுதிநேர பணி நியமனம் பெற வாய்ப்புள்ளது". 3.மேற்கண்ட நிலையில் கைத்தொழில் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்க இயலாத நிலை உள்ளது என்பதை  தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்." எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கடிதத்தின்படி பகுதிநேர  "தோட்டக்கலை" ஆசிரியர் நியமனத்திற்கு T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் ஆனால் திட்ட இயக்குனர் பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணி நியமனத்திற்கு வேளாண்மைத்துறைக்கு வேலைவாய்ப்புக்கு செல்லக்கூடடிய Diplomo agri, B.sc agri, M.sc agri படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க கல்வித்தகுதி நிர்ணயித்துள்ளார்கள்.பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் சில மாவட்டங்களில் மட்டும் மேலே குறிப்பிட்ட கல்வித்தகுதி உடையவர்களைக் கொண்டு நியமனம் செய்தும் பலமாவட்டங்களில் பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

     தற்பொழுது 1992 முதல் T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணி நியமனத்தடை இருந்துவரும் நிலையில் 
2000 ல் பள்ளி தலைமையாசிரியர்கள் மேல்நிலைப் பள்ளிகளில்(+1,+2) விவசாயப் பாடத்தை நடத்துவதற்கு T.T.C விவசாயம் படித்தவர்களை தற்காலிகமாக நியமனம் செய்துள்ளார்கள்.T.T.C விவசாயம் படித்தவர்கள் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) மட்டுமே பாடம் நடத்த தகுதியுடையவர்கள்.தற்பொழுது மேல்நிலை பள்ளிகளில் தற்காலிகமாக விவசாயப்பாடம் நடத்தும் T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு "மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்" மூலம் சிறப்பு பயிற்சி வழங்கி முழுநேர விவசாய ஆசிரியர்களாக மாற்ற பயிற்ச்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது T.T.C பயிற்ச்சி முடிக்காத பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம்  T.T.C பயிற்ச்சி கொடுப்பதற்க்கு முயற்ச்சிகள் நடந்து வருகிறது.சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு T.T.C விவசாய பணியிடத்தை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறாக T.T.C விவசாயம் படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து தோட்டக்கலை ஆசிரியர் (விவசாய கைத்தொழில் ஆசிரியர்)பணிக்கு காத்திருக்கும்போது தவறான முறையில் பணியில் சேர்ந்தவர்களை காப்பாற்றும் முயற்சி நடைபெறுகிறது RMSA திட்டத்தில் விவசாயம் ஒரு பாடமாக மாதிரிப்பள்ளிகளில் இடம்பெற்றறுள்ளது .9மற்றும்10ஆம் வகுப்பு T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்காமல் B.sc agri படத்தவர்களை தனியார் துறை மூலம் நியமனம் செய்துள்ளார்கள். எனவே பள்ளிகளில்  விவசாயம் ஒரு பாடமாக வந்துகொண்டு இருப்பதால்(6-8தோட்டக்கலை,9&10ஆம் வகுப்புகளில் விவசாயம்) T.T.C விவசாயம் படித்தவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க எது தடையாக உள்ளதோ அதை நீக்கம் செய்து விவசாய கைத்தொழில் ஆசிரியர் (தோட்டக்கலை  ஆசிரியர்) பணி வழங்க வேண்டுமாய் இரு கரம் கூப்பி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் நிதிச்சுமை ஏற்படும் என்று நினைத்தால் பள்ளிக்கல்வி செயலாளர்  அவர்கள் இயக்குனர்க்கு அனுப்பிய கடிதத்தில் பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் நியமனத்ததிற்கு வாய்ப்புள்ளது என்று  குறிப்பிட்டுள்ளதால் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் பகுதிநேர தோட்டக்கலை ஆசிரியர் பணியிடங்களில் T.T.C விவசாயம் படித்தவர்களுகளை நியமனம் செய்யவேனுமாய் மீண்டும் ஒருமுறை இரு கரம் கூப்பி அண்போடு கேட்டுக்கொள்கிறோம்.மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி 1991-1996 காலகட்டத்தில் ஆட்சிபொறுப்பில் இருந்தபொழுது அப்போதைய வேளாண்மை துறை அமைச்சர் திரு.கு.ப.கிருஷ்ணன் அவர்கள் சட்டசபையில் 95-96ம் கல்வி ஆண்டு முதல் "பள்ளிகளில் வேளாண்மையும் ஒரு பாடம்"(6ஆம்
வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.கோவை வேளாண்மை பல்களைக்கழகம் மூலம் வேளாண்பாடத்திட்ட கையேடு (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை)என்ற புத்தகம் தயாரிக்கப்பட்டு 100 அரசு பள்ளிகளுக்கு மட்டும் புத்தகம் அனுப்பப்பட்டு T.T.C விவசாயம் கைத்தொழில் ஆசிரியர் (தோட்டக்கலை) பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.எனவே மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குறைந்தபட்சம் கிராமபுர பள்ளிகளுக்கு விரிவுபடுத்தி வேளாண்பாடத்திட்ட கையேடு (6ஆம்
வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை) என்ற புத்தகத்தை அச்சிட்டு அறிமுகம் செய்து அதில் T.T.C விவசாயம் படித்தவர்களை விவசாய கைத்தொழில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டுகிறோம்.

இடம்:இராமசாமிகட்டளை                    தேதி:14/10/2019                                                                                     இப்படிக்கு
                            ரெ.கொளஞ்சியப்பன்
                                       T.T.Cவிவசாயம்
                                          படித்தவர்கள்
                                               சார்பாக

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி