இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறுகிறது? - kalviseithi

Oct 31, 2019

இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறுகிறது?


தொலைத்தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரிப்பதாக கூறப்படுவதால் இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு  இயங்கும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் தனித்து இயங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன்-ஐடியா என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது. தொடர்ந்து நிகழ் நிதியாண்டின், முதல் இரண்டு காலாண்டுகளாக தலா 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை எதிர்க் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு கட்டணத்தில் 28 ஆயிரத்து 306 கோடி ரூபாயை நிலுவையாக வைத்துள்ளது.

ஏற்கனவே ஜியோ வருகையால் நட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான நிதிசூழலால் வேடபோன் நிறுவனத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வோடபோன் நிறுவனம் தனது இந்திய சேவையை நிறுத்தி கொண்டு நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என தொலைத்தொடர்பு வட்டார தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வோடபோன் - ஐடியா செய்தி தொடர்பாளர்களுக்கும் அதன் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் குழு தலைவர் பென் படோகன் ஆகியோரை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியது. ஆனால் அதற்கு வோடபோன் - ஐடியா நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி