பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2019

பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல்


பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல்

பொதுத்தேர்வு பணி ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப வேண்டும் தேர்வுத்துறை அறிவுறுத்தல்  சென்னை  பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

 தமிழக பள்ளி கல்வியின் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 இதையடுத்து பொதுத்தேர்வு பணிகளில் ஈடுபட உள்ள தலைமை யாசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள், மற்றும் இதர அலு வலக பணியாளர்களின் விவரங் களை இறுதி செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளும் விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும், அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளி வாரியாக ஆசிரியர்கள் விவரப்பட்டியலை குறிப்பிட வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து விடைத்தாள் அச்சிடுதல் மற்றும் வினாத்தாள் தயாரிப்பு போன்ற அடுத்தகட்ட பணிகளுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி