அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கர் லேப் - அமைச்சர் செங்கோட்டையன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 7, 2019

அரசுப் பள்ளிகளில் அடல் டிங்கர் லேப் - அமைச்சர் செங்கோட்டையன்!


''தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், டிசம்பர் முதல் வாரத்தில், 'அடல் டிங்கர் லேப்' துவங்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

'இஸ்ரோ' மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், இஸ்ரோ விண்வெளி கண்காட்சி, ஈரோடு மாவட்டம், கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் கண்காட்சியை, அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் துவக்கி வைத்தனர்.விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:பள்ளி மாணவர்களை, சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க, இதுபோன்று, கண்காட்சி நடத்தப்படுகிறது.

முதல்வர், இ.பி.எஸ்., ஒப்புதலோடு, தமிழகத்தில், 1,000 பள்ளிகளில், 'அடல் டிங்கர் லேப்' என்ற விஞ்ஞான ஆய்வகம், டிசம்பர் முதல் வாரத்தில் துவங்கப்படும்.இதற்காக, தமிழகத்தில் ஒவ்வொரு பள்ளிக்கும், 20 லட்சம் ரூபாய் வழங்கி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாணவன் விஞ்ஞான ரீதியாக ஆராய்ச்சி செய்யவும், அரசு, நிதி வழங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

4 comments:

  1. Athaium pakuren
    Entha latchanathula Kollai adikurenganu
    By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai

    ReplyDelete
  2. தரமற்ற ஆசிரியர்கள் எந்தவொரு நல்ல திட்டத்தையும் வீணாக்கிவிடுவார்கள்....

    ReplyDelete
    Replies
    1. தரமற்ற ஆசிரியர் என்று கூற உங்களுக்கு உரிமையில்லை. போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றோர் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் நிறைய இருக்கிறார்கள்.

      Delete
  3. நீங்கள் ஆசிரியரா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி