பல்கலை., கல்லூரி தேர்வு முறையில் மாற்றம் செய்ய திட்டம் மாணவர்களின் தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க முடிவு  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2019

பல்கலை., கல்லூரி தேர்வு முறையில் மாற்றம் செய்ய திட்டம் மாணவர்களின் தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சியை நிர்ணயிக்க முடிவு 


இளநிலை பட்டம் பயிலும் மாண வர்களின் தேர்ச்சியை தொடர் கற் றல் மதிப்பீடு அடிப்படையில் நிர் ணயிக்க யுஜிசி முடிவு செய்துள் ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன.

இந்திய நாட்டில் 847 பல்கலைக் கழகங்களும் அவற்றின்கீழ் சுமார் 40,000 கல்லூரிகளும் இயங்கு கின்றன. இந்த கல்வி நிறுவனங் களில் ஆண்டுதோறும் சராசரியாக 3.74 கோடி மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேருகின்றனர்.இதற்கிடையே உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு மாற்றங்களை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதன் படி இளநிலை பட்டப்படிப்பு பயி லும் மாணவர்களுக்கான தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது. மேலும், மனப்பாட முறையை ஒழிக்கும் விதமாக தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில்மாணவர்கள் தேர்ச்சி நிர்ணயிக்கப் படும் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அதிகாரி கள் சிலர் கூறியதாவது:நாடு முழுவதும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல் லூரிகளில் ஆண்டு இறுதி அல் லது பருவத்தேர்வு முடிவுகளின் படி தற்போது மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தேர்வுக்கு முந்தைய நாட்கள் மட்டும் படித்துவிட்டு குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்களை பெற்று அனேக மாணவர்கள் பட்டங்களை பெறும் நிலையே நிலவுகிறது.இவ்வாறு முழுமையான கல்வி கற்காமல் மாணவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும்போது வேலை வாய்ப்பு, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நடைமுறையில் உள்ள தேர்வு முறை மாணவர்களிடம் மனப்பாட கற்றலை ஊக்குவிப்பதாக மத்திய அரசின் ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது.

இதையடுத்து தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர யுஜிசி சார் பில் பேராசிரியர் எம்.எம்.சலூன்கே தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு கல்லூரிகளில் தொடர் கற்றல் மதிப்பீடு அடிப்படையில் மாணவர் கள் தேர்ச்சியை நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளது.அதன்படி புதிய முறையில் இறுதித்தேர்வுக்கு 30 மதிப்பெண்க ளும், ஆண்டு முழுவதும் மாணவர் கள் மேற்கொள்ளும் திறன் கற்றல் வகை நடவடிக்கைகளுக்கு 70 மதிப்பெண்களும் ஒதுக்கப்படும். இதில் பெறும் மதிப்பெண்களின்படி மாணவர்கள் தேர்ச்சி நிர்ணயிக்கப் படும்.இந்த திறன் கற்றலில் மாணவர்கள் ஒவ்வொரு பாடம் முடிந்தபின்னும் விநாடி வினா, கட்டுரை, குழு விவாதம், செயல் விளக்கக் காட்சிகள், வரைபடம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு வடிவ செயல்பாடுகளில் தங்களை ஈடு படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும், பாடங்கள் சார்ந்து பேராசிரியர்கள் வழங்கும் பணி களையும் மாணவர்கள் செய்து முடிக்க வேண்டும். இத்தகைய திறன் கற்றல் செயல்பாடுகளைத் தொகுத்து ஆசிரியர்கள் 70 மதிப் பெண்களுக்கு மதிப்பீடு செய்வார்கள்.

இதுதவிர பல்கலைக்கழ கங்கள் விரும்பினால் ஆண்டு இறுதித் தேர்வை நிராகரித்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு கற்றல் செயல்பாடுகளை தீர்மானித்துக் கொள்ளும் அம்சமும் பரிந் துரையில் கூறப்பட்டுள்ளது.இந்த தொடர் கற்றல் மதிப்பீடு முறை ஏற்கெனவே கணிசமான தனியார் கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளது. அவற்றை மேலும் மேம்படுத்தி அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தினால் மாணவர்கள் மனப்பாட முறையில் இருந்து விலகி அடிப்படை கற்றல் மற்றும் கடினமான சூழலில் முடிவுஎடுக்கும் திறன்களை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யும்.இந்த பரிந்துரைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. புதிய மாற்றம் தொடக்கத்தில் மாண வர்களுக்கு கடினமாகத் தெரிந் தாலும் அதன்பின் ஆர்வத்துடன் வரவேற்பார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி