தேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2019

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா?


தேசிய திறனாய்வு தேர்வுக்கு, பிரத்யேக பயிற்சி கிடைக்குமா என்ற ஆவல், அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மத்திய மனிதவளத் துறை சார்பில், நன்கு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க, ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்.இரண்டு கட்டமாக நடத்தப்படும் தேர்வில், தேர்ச்சி பெறுவோருக்கு, பிளஸ் 1, பிளஸ் 2வில்,மாதந்தோறும், 1,250 ரூபாய், பட்டப் படிப்புக்கு மாதம், 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.பாடத்திறன், மனத்திறன் அடிப்படையில், 200 மதிப்பெண்களுக்கு தேர்வுநடக்கும். நடப்பு கல்வியாண்டில், நவம்பர், 3ல், முதல் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது.


இதில் அரசுப் பள்ளி மாணவர்களும் பங்கேற்க, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் தேர்வுக்கு தயாராக, போதிய பயிற்சி, வழிமுறைகளை கற்றுக் கொடுப்பதில்லை என்ற ஏக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து, மாணவர்கள், பெற்றோர் கூறியதாவது:இத்தேர்வுக்கென தனியார் பள்ளிகளில், பல மாதங்களுக்கு, பிரத்யேக பயிற்சி தருகின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில், உரிய வழிகாட்டுதல், பயிற்சி இல்லை.

கடந்த ஆண்டில், ஓரிரு மணி நேரம் மட்டும் பயிற்சி வகுப்பு நடத்தினர்.இதனால், எவ்வித பயனும் கிடைக்கவில்லை.பள்ளிகளில் தினமும் இதற்கென பிரத்யேக பயிற்சியளித்தால், அரசுப் பள்ளி மாணவர்களும், உதவித்தொகை பெறும் நிலை உருவாகும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

1 comment:

  1. Hello educational department
    To concentrate this ntse exam
    By Mahalakshmi teacher from Thirupoondi North Nagai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி