ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2019

ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும்!


வழக்குத் தொடுத்த ஆசிரியர்கள், கலந் தாய்வில் பங்கேற்க ஏதுவாக அவர்களின் விவரங்களை கல்வி மேலாண்மை தகவல் முகமை ('எமிஸ்') இணையதளத்தில் பதி வேற்ற வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். அதன் படி நடப்பாண்டு கலந்தாய்வு விதிமுறைகளில் ஒரே பள்ளியில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு மட்டும் இட மாறுதல் தரப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.இதை தளர்த்தக் கோரி நூற்றுக்க ணக்கான ஆசிரியர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் கலந்தாய்வு நடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றியி ருக்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வை நடத்தஅரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டது. அதையேற்று வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு இதை தவறை அம் என இட மட்டும் விதியை தளர்த்தி திருத் தப்பட்ட வழிகாட்டு நெறிமுறை களை கடந்த அக்.4-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.அதில், பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டும் குறைந்தது 3ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றிருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப் பட்டது.

இதையடுத்து வழக்கு தொடுத்த ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங் கேற்க ஏதுவாக அவர்களின் விவ ரங்களை கல்வி மேலாண்மை தக வல் முகமை ('எமிஸ்') இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள் ளார்.

இதுதவிர, ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பான அறிவிப்பாணை அக்டோபர் இறுதியில் வெளியாகும். கலந்தாய்வு நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 comment:

  1. Valaku thodukatha( 2 years completed in one school) disabled teachers counselingla kalanthukolla mudiuma?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி