Flash News : 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2019

Flash News : 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரை மணிநேரம் அதிகரிக்கப்படுகிறது.தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணிநேரத்தில் கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது . இந்த கல்வி ஆண்டு முதலே இது நடைமுறைக்கு வருகிறது.

புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் நடவடிக்கை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள்

கடந்த ஜுலை மாதம், 2019-2020ம் கல்வி ஆண்டில், மார்ச்/ஏப்ரல் 2020-ல் நடைபெறவுள்ள  10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அட்டவணை[பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டது.அதன்படி பத்தாம் வகுப்புக்கு அடுத்த வருடம் மார்ச் 17ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 9ம் தேதி முடிவடைகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 4 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. பின்னர், 11ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் அறிவியல், வணிகம், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இதே போல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வருடம் மார்ச் 2ம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. 2, 5 ஆகிய தேதிகளில் மொழி பாடங்களுக்கான தேர்வும், அதைத் தொடர்ந்து பிற பாடங்களுக்கான தேர்வும் நடைபெறுகிறது.

கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும்

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை உருவாக்கியுள்ள புதிய பாடத் திட்டத்தின் கீழ் இந்தாண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது 2.30 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நேரம் போதுமானதாக இல்லையென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.  அத்துடன் தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. 10,12- 75, 80 Marks kku Exam எழுதுற Students Exam முடிச்சுட்டு Half an hour exam hall la தூங்குறது இனிமேல் One hour தூங்குவான்க, HALL supervisor dhan எழுப்பி விடணும்...

    ReplyDelete
  2. தேவை படர subject மட்டும் 3.00மணிநேர ஆக்கான போதும்

    ReplyDelete
  3. எந்த அறிவாளி இப்படி எல்லாம் யோசனை சொல்றாங்கன்னு தெரியல

    ReplyDelete
  4. எந்த அறிவாளி இப்படி எல்லாம் யோசனை சொல்றாங்கன்னு தெரியல

    ReplyDelete
  5. This time extension is very useful to our students

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி