School Morning Prayer Activities - 17.10.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2019

School Morning Prayer Activities - 17.10.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.10.19

திருக்குறள்


அதிகாரம்:வாய்மை

திருக்குறள்:297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

விளக்கம்:

பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவனுக்கு நல்லதாகிவிடும்.

பழமொழி

A good when lost is valued  most.

 நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம் எனவே எதன் மீதும் அதிக ஆசை கொள்ள மாட்டேன்

2. பிறர் பொருட்கள் மீது ஆசை வைத்து அவற்றை எடுத்துக் கொள்ள மாட்டேன்.

பொன்மொழி

முதலில் சேவை ,பின்பு தன்னலம் என்ற மனப்பக்குவம் உடையவர் இன்னல்களுக்குள் இன்பத்தைக் கண்டுபிடிப்பவர்கள் ஆவர்

--- இறையன்பு

பொது அறிவு

* உலகின் மிகப்பெரிய தீவு எது?

கிரீன்லாந்து
* பாலைவனம் இல்லாத கண்டம் எது? 

 ஐரோப்பா

English words & meanings

• Icicle -  frozen  dripping water.
 தொங்கு உறைபனி துளி.

• Isomerism - two compounds having the same molecular formula but a different configuration
சமபகுதியம். இது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும், வேறுபட்ட கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்களாகும்.

ஆரோக்ய வாழ்வு

பப்பாளியில் புரதத்தை செரிப்பிக்கும் ஒரு சத்துப்பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைக்கும் போது சிறிதளவு பப்பாளிக்காயை மாமிசத்தில் கலந்து வேகவைக்க உடனடியாக கறி வேகும்.

Some important  abbreviations for students

• St. - Street.   

• VP - Vice president

நீதிக்கதை

வாழ்க்கைக்கு வழிகாட்டிய பறவை

ஒரு கிராமத்தில் ராமு என்று ஒருவன் இருந்தான். அவனுக்குப் போதுமான அளவு செல்வம் இருந்தது! ஆனால் அவன் மிகவும் சோம்பேறி. கிராமத்தில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்லும்போது இவன் மட்டும் உறங்கிக்கொண்டிருப்பான்.

ஒருநாள் மாலை அவன் கிராமத்தைச் சுற்றி வந்த போது ஒரு சிறிய அழகான பறவையைப் பார்த்து தன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அதனுடன் விளையாடிப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து பறவைக்குச் சிறிது உணவு அளித்தான். அது உணவு உண்ணும் அழகைக் கண்டு ரசித்தான். சற்று நேரத்தில் இருட்டிவிட்டது! வழக்கம் போல் தூங்கி விட்டான்.

பொழுது விடிந்தது. கண்விழித்துப் பார்த்த அவன் அதிர்ந்து போனான்! அவன் உணவளித்த பறவை சுமார் மூன்றடி உயரம் வளர்ந்திருந்தது!

நான் சிறிய பறவையைத்தானே எடுத்து வந்தேன்! நீ எடுத்து வந்த பறவைதான் நான்! வளர்ந்துவிட்டேன். எனக்குப் பசிக்கிறது, ஏதாவது சாப்பிடக்கொடு என்றது பறவை. அதற்கு சிறிது தானியங்களைப் போட்டான். பறவை அதைத் தின்றுவிட்டு மீண்டும் பசிக்கிறது என்றது.

ராமு தனக்காக இருந்த உணவையும் பறவைக்கு அளித்து விட்டான். ராமுவுக்கு சாப்பிட எதுவும் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியே சென்றான். பகல் முழுதும் வெளியில் இருந்து விட்டு இரவு வீடு வந்து பார்த்தான். அந்தப் பறவை மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது! வீடு முழுவதையும் அது அடைத்துக் கொண்டிருந்தது! அவனால் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியவில்லை!

ராமுவுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. வெளியே, குளிரில் படுத்து உறங்கினான். விடிந்தது! ராமுக்கு பசியாக இருந்தான். அப்போது அவ்வழியே மூட்டையைச் சுமந்து கொண்டு வந்த ஒரு வண்டியிலிருந்து இறங்கிய பெரியவர் ராமுவைப் பார்த்து, தம்பீ, மூட்டையை சற்று இறக்கித்தா. நான் உனக்குப் பணம் தருகிறேன் என்றார்.

எனக்கு உணவு கிடைக்குமா? வாங்கித் தருகிறேன் என்றார் பெரியவர். பசியோடு இருந்தவனுக்கு அவர் வாங்கித்தந்த உணவு அமிர்தமாக இருந்தது. சாப்பிட்டபின் வீட்டுக்குச் சென்றான். ஆனால் பறவையை எப்படியாவது வீட்டை விட்டு அகற்றிவிட வேண்டும் என்று நினைத்தான்.

வீட்டிற்குச் சென்றதும் பறவை சற்று சிறிதாக மாறியிருந்தது! எப்படி இது என்றான் ராமு. உன் சோம்பல் சற்று குறைந்துவிட்டது அல்லவா? அதனால்தான் என்றது.

மறுநாள் கூலி வேலைக்குச் சென்றான். கிடைத்த கூலியில் வயிறார உண்டான். உணவை பறவைக்கும் வாங்கிக் கொண்டான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது! இனி உழைத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றான்.

பறவை முதலில் இருந்தது போலவே மிகவும் சிறியதாக இருந்ததைக் கண்டான்! இது எப்படி? என்று பறவையைக் கேட்டான். உன் சோம்பேறித்தனத்தை மாற்றவே நான் அப்படி செய்தேன். நான் வந்த வேலை முடிந்தது என்றது பறவை.

எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த உணவைச் சாப்பிடு என்றான் ராமு. என் மீது நீ கொண்ட அன்பிற்கு நன்றி! எனக்கு உணவு வேண்டாம். உன் சோம்பல் நீங்கியதே அதுதான் எனக்கு நிம்மதி! என் உணவை நான் தேடிக்கொள்ளுவேன் என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்தது.

அது வானில் ஓரு புள்ளியாய் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்த ராமுவிற்கு அழுகை வந்தது. இது உலகிற்கு ஞானத்தை ஊட்ட நினைக்கும் பறவை போலிருக்கிறது என்று கண்களைத் துடைத்துக்கொண்டார்.

நீதி :
உழைத்து சாப்பிட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்கும்.

இன்றைய செய்திகள்

17.10.19

*கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக பி.காளிராஜ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*தில்லியில் அமல்படுத்தப்பட உள்ள வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தாா்.

*தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்தமழை பதிவாகியுள்ளது.

* பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி 6-வது முறையாக யூரோப்பியன் தங்க ஷூவை கைப்பற்றியுள்ளார்.

*  மும்பை மற்றும் ஜார்க்கண்ட் இடையிலான விஜய் ஹசாரே கோப்பை எலைட்  போட்டியின் போது  இரட்டை சதமடித்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார் ( 17 வயது) யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Today's Headlines

🌸Thiru P. Kaliraj is appointed as New vice-chancellor for Kovai Bharathiyar University.

🌸In the new amended  motor vehicle act which is to be executed in Delhi there will be exemptions for physically challenged people says Delhi CM Arvind Kejriwal.

🌸North East monsoon started in Tamil Nadu. Some places in 11 districts recorded heavy rain.

🌸 The star Player  and also the Barcelona team captain Leo Messy going to receive the European golden shoes for the sixth time.

🌸In Vijay Hazare Trophy Mumbai teenager Yashasvi Jaiswal becomes theyoungest cricketer to score double century.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி