School Morning Prayer Activities - 31.10.2019 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2019

School Morning Prayer Activities - 31.10.2019


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.10.19

திருக்குறள்


அதிகாரம்:வெகுளாமை

திருக்குறள்:307

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

விளக்கம்:

நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

பழமொழி

Hard work can accomplish any task.

 எறும்பு ஊற கல்லும் தேயும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நன்றி மறப்பது நன்று அன்று.

2. எனவே எனக்கு வாழ்வு தந்த கடவுளிடமும் எனக்கு உதவி செய்த அனைவரிடமும் நன்றியோடு இருப்பேன்.

பொன்மொழி

ஒரு சூழலில் பயன்படும் பொருள் மற்றொரு சூழலில் பயன்படுவதில்லை. மனிதர்கள் இதனை பக்குவமாக கையாள கற்றுக்கொண்டால் ஏமாற்றங்களை களையலாம்...
---- இறையன்பு

பொது அறிவு

அக்டோபர் 31

இன்று தேசிய ஒற்றுமை தினம் -சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்

1.'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படுபவர் யார்?

  சர்தார் வல்லபாய் படேல் அவர்கள்.

2. சர்தார் வல்லபாய் படேலின் 182 அடி சிலை நிறுவப்பட்டுள்ள இடம் எது?

 குஜராத் மாநிலத்தில் நர்மதா நதிக்கரையில்.

English words & meanings

Taxonomy - study of plant, animals and microorganisms classification
தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் வகைப்பாட்டியியல் குறித்த அறிவியல்.

Tinker - a person who mends metal utensils.
தெரு தெருவாக சென்று ஓட்டை உடைசல் அடைப்பவர்.

ஆரோக்ய வாழ்வு

கற்றாழையின் ஜெல்லைக் கொண்டு சரும அலர்சியையும், சருமம் சிவந்து இருப்பதையும் தடுக்கலாம் .மேலும் பருக்கள் உடைவதை தடுக்கலாம்.

Some important  abbreviations for students

PLC - Public limited company.

 FBI - Federal Bureau of investigation

நீதிக்கதை

ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.

ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

31.10.19

*கியார் புயலைத் தொடர்ந்து, குமரி கடல் பகுதியில் மீண்டும் ஒரு புயல்.

*இன்னும் இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

*அணைகள், ஏரிகள், குளங்களின் நீரின் அளவை 24 மணி நேரமும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.

*குமரியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 8 படகுகளில் கரை சேர்ந்தன 3 படகுகள்!

*பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற ஒரு வாரத்திற்குள் பெரிய வரலாற்று நிகழ்வை முன்னின்று நடத்த இருக்கிறார் கங்குலி.
இந்திய அணி  பகல் - இரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் நிகழ்வுதான் அது.  வங்கதேச அணியோடு போட்டி.

Today's Headlines

🌸Following the Kiyar storm,  another storm  arises again near the part of kaniyakumari sea.

🌸Heavy rain warning in 22 districts for two more days.

🌸The Public Welfare Department has ordered officials to monitor the water levels of dams, lakes and ponds for 24 hours a day.

🌸Out of the 8 fishing boats which  missed from Kumari 3 boats came to the shore .

🌸Ganguly will lead a major historical event within a week after taking over  as BCCI president. It was an event where the Indian team participate in the day-night Test match. Will compete with Bangladesh team.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி