தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2019

தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம்


தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் இயற்கை விவசாய முறையில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இயற்கை விவசாயத்தை ஊக்கு விக்க வேளாண்மைத் துறையும், தோட்டக்கலைத் துறையும் பல் வேறு முயற்சிகளை மேற்கொண் டுள்ளன. வீடுகளுக்குத் தேவை யான காய்கறிகளை அந்தந்த வீட்டினரே மாடித் தோட்டம் மூலம் உற்பத்தி செய்வதற்காக இயற்கை விவசாய முறையில் மாடித் தோட்டத்தை அமைக்க தோட் டக்கலைத் துறை உதவி வரு கிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி வளாகங்களில் இடமிருந் தால், தரைப்பகுதியிலோ அல்லது மாடியிலோ காய்கறித் தோட்டம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பணி கள் தொடங்கியுள்ளன.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

ஊட்டச்சத்து குறைப்பாடு

உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டது. ஆனால் பொதுமக்களிடம், குறிப் பாக வளரினம் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு இருப்ப தால் காய்கறிகள், பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாகி உள்ளது. ஒரு நபர் தினமும் 300 கிராம் காய்கறிகள்,100 கிராம் பழங்களை சாப்பிட வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.அதனால்தான் நகர்ப்புற தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக சுமார் ஆயிரம் பள்ளி, கல் லூரிகளில் இயற்கை விவசாய முறையில் மாடித்தோட்டம் அமைக் கப்படுகிறது. காலியிடம் இருந் தால் அதில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும். இல்லாவிட்டால் மாடியில் தோட்டம் அமைக்க உள்ளோம்.

இப்பணியை மேற்கொள் வதற்காக பள்ளி அல்லது கல்லூரி முதல்வர் தலைமையில் தோட்டக்கலைக் குழு அமைக்கப் படுகிறது. இக்குழுவில் சம்பந்தப் பட்ட பள்ளியின் ஆசிரியர், தோட் டக்கலைத் துறை உதவி இயக்கு நர், துறை அலுவலர், மாண வர்களின் பிரதிநிதி என 5 பேர் இடம்பெறுவர். இக்குழுவில், விருப்பம் உள்ள அனைத்து மாண வர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, மாடித்தோட்டம் அமைக்கும் பணி தொடங்கும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிக்கும் மாடித்தோட்ட விழிப்புணர்வுக்காக 2 ஆண்டுகள் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். குறைந்தபட்சம் ஆயிரம் சதுரஅடியில் இருந்து 5 ஏக்கர் பரப்பளவில் தோட்டம் அமைக்கப்படும்.

மாடித்தோட்டம் அமைக்க விதை, உரம், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப் படுவதுடன், சொட்டுநீர்ப் பாசனம், நிழல்வலைக் கூடம், ஆள்துளை கிணறு அமைக்கவும் உதவி செய்யப்படும். இத்தோட்டத்தில் தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், கொத்தரவரங்காய், மிளகாய், பீர்க்கங்காய், பாகற்காய், அவரை, பூசணிக்காய், தவசி கீரை, அகத்திக் கீரை, அரைக்கீரை, பருப்புக் கீரை, மணத்தக்காளிக் கீரை, முருங்கை, கருவேப்பிலை ஆகியன உற் பத்தி செய்யப்படும். இதனால் அப்பகுதியில் காய்கறிகள், கீரை வகைகள் ஆண்டுமுழுவதும் தட்டுப் பாடில்லாமல் கிடைக்கும்.

முதலில் அரசு பள்ளி, கல் லூரிகளுக்கு முன்னுரிமை தரப் படும். பின்னர் படிப்படியாக தனியார் பள்ளிகளிலும் மாடித்தோட்டம் அமைக்க ஊக்குவிக்கப்படும். இதன்மூலம் தமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் தன்னிறைவு எட்டப்படும். எதிர்காலத்தில் அனைத்து ஐ.டி.கம்பெனிகளிலும் மாடித்தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

 1. திட்டம் சரிதான் பல ஆண்டுகளாக T.T.C விவசாயம் படித்து வேளைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து விவசாய கைத்தொழில் ஆசிரியர்(தோட்டகலை ஆசிரியர்) பணிக்கு காத்துக்கொண்டு இருக்கிரார்கள் என்ற செய்தி கல்வி துறைக்கு தெரியுமா? தெரியாதா? பல துறைகளில் கூட்டு முயற்ச்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டாலும் கண்கானிப்பதற்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் எண்பது கல்வி துறைக்கு தெரியாதா?எனவே T.T.C விவசாயம் படித்தவர்களை பள்ளிகளில் நியமனம் செய்தால் இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்த முடியும் என்பதை கல்விதுறை உணர வேண்டும்.
  இப்படிக்கு
  ரெ.கொளஞ்சியப்பன் T.T.C விவசாயம் படித்தவர்கள் சார்பாக

  ReplyDelete
 2. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
  Call or whatsapp +91 9945317569

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி