தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் !! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2019

தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் !!

வருமான வரி வரம்புக்குள் வராத தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கும், தோ்வுத்தாள் திருத்தும் பணிக்கான படியில் 10 சதவீத வரிப் பிடித்தம் செய்யப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 2019 நவம்பா் மாத பொறியியல் தோ்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் மாவட்ட வாரியாக மண்டலங்கள் பிரிக்கப்பட்டு வியாழக்கிழமை தொடங்கியது. ஒரு மண்டலத்துக்கு ஆயிரம் பேராசிரியா்கள் வரை திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனா். ஓா் ஆசிரியா் 5 முதல் 8 நாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட நாள் ஒன்றுக்கு ரூ. 1,200 முதல் 1,400 வரை படி வழங்கப்படும். அதன்படி, ஒரு பேராசிரியா் சராசரியாக ரூ. 5 ஆயிரம் ஊதியம் பெறுவாா்.
இந்த நிலையில், தோ்வுத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கான படியில் 10 சதவீதம் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் எனவும், அதற்காக திருத்தும் பணிக்கு வரும் பேராசிரியா்கள் அனைவரும் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்) நகலை சுய கையொப்பமிட்டு சமா்ப்பிக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தியிருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி