அரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்  - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2019

அரசு கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் 


அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு கல்வியாண்டில் (2019-20) அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்வரை மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள தொழில்நுட்பக்கல்வி இயக்குநர் கருத்துரு வழங்கியுள்ளார்.அதையேற்று பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படி 11 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக 1,531 கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக ரூ.25.26 கோடி நிதியும் அரசு சார்பில் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் 34 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. Apo polytechnic exam varaadha???

    ReplyDelete
  2. Epo notification varum nu any guessing bro?

    ReplyDelete
  3. Polytechnic வழக்கில் உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 8தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது . தீர்ப்பு வந்த உடன் மறு தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் பணியிடங்களை நிரப்பியிருக்கலாம் . தற்காலிகமாக பேராசிரியர்களை நியமனம் செய்ய இப்பொழுது அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறார்கள் .இது தேர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் தரும் செயல் . தேர்வில் முறைகேடு நடந்திருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் ,தேர்வை ரத்து செய்து மறுதேர்வை அறிவிப்பை வெளியிட்டவர்கள் ,இப்போதுஇறுதி தீர்ப்பு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் மறு தேர்வு அறிவிப்பு வெளியிடாது ஏன் ?

    ReplyDelete
    Replies
    1. Poly exam vara chance illaya? Pls tell me.

      Delete
    2. Trb polytechnic notification may be February month sir

      Delete
  4. 15000 ஊதியய்திலேயே காலத்தை ஓட்டிவிடுவார்கள்.பதிய நியமனங்கள் இனுக்காது.உயர் கல்வித்துறையில் சுமார் 80% பணியிடங்கள் காலி.இந்த பணியிடங்களை நிரப்பாமல் அந்த நிதியை வேறு துறைகளில் விரையம் செய்டின்றனர்.

    ReplyDelete
  5. PG TRB EXAM mudintha andru TRB SECRETARY oru mathathil polytechnic TRB EXAM nadathapadumnu petty koduthanga...!!!!

    ReplyDelete
  6. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி