சி.ஏ., படிக்க, 'ஆன்லைன்' திறனறி தேர்வு பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்! முதல் பரிசு 1 லட்சம்! - kalviseithi

Nov 24, 2019

சி.ஏ., படிக்க, 'ஆன்லைன்' திறனறி தேர்வு பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்! முதல் பரிசு 1 லட்சம்!


பள்ளி மாணவர்களுக்கு, சி.ஏ., படிப்பின் முக்கியத்துவம் தெரியும் வகையில், ஆன்லைன் திறனறி தேர்வு நடத்தப்பட உள்ளதாக, இந்திய கணக்கு தணிக்கையாளர்கள் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆடிட்டர் பணிபிளஸ் 2வில், பொருளியல், கணக்கு பதிவியல் படித்த மாணவர்கள், பட்டப்படிப்புக்கு செல்லும் போது, சி.ஏ., தேர்வையும் எழுதலாம். பட்டப் படிப்புக்கு இணையாக கருதப்படும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஆடிட்டராக பணியாற்றலாம்.

இந்நிலையில், சி.ஏ., படிப்பில் பள்ளி மாணவர்கள் ஆர்வம் குறைந்தும், உரிய விழிப்புணர்வும் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐ.சி.ஏ.ஐ., பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, சி.ஏ., தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல், சி.ஏ., தேர்வு குறித்து, தங்களை தாங்களே மதிப்பிடும் வகையில், ஆன்லைன்திறனறி தேர்வை நடத்த போவதாகவும் அறிவித்துள்ளது. பரிசுஇதன்படி, ஜனவரி, 5ல் முதல் நிலை தேர்வும்; ஜன., 19ல் இரண்டாம் நிலை தேர்வும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு, பரிசு வழங்கப்பட உள்ளது.

முதல் பரிசாக, 1 லட்சம் ரூபாய்; இரண்டாம் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை, http://icaicommercewizard.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி