6 TO 9th Std - Hall Yearly Examination Dec 2019 - Time Table - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2019

6 TO 9th Std - Hall Yearly Examination Dec 2019 - Time Table


6 முதல் 9ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு அறிவிப்பு

பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகளுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டின் இறுதியில், அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து, பொது தேர்வு நடத்தப்படும். மற்ற வகுப்புகளுக்கு, முப்பருவ தேர்வு முறை உள்ளதால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் போது, பருவ தேர்வுகளாகநடத்தப்படுகின்றன. ஒரு பருவத்தில் இடம்பெற்ற பாடங்களுக்கு, இன்னொரு பருவத்தில், தேர்வு நடத்தப்படுவது இல்லை.

நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 13ல், அரையாண்டு தேர்வு துவங்கி, 23ல் முடிகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, டிச., 11ல் துவங்கி, 23ல் முடிகிறது. இதற்கான அறிவிப்பு, ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது.இந்நிலையில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வான இரண்டாம் பருவ தேர்வு தேதி குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிசம்பர், 13ல் தேர்வுகள் துவங்க உள்ளன. ஆறு மற்றும், ஏழாம் வகுப்புகளுக்கு, காலை, 10:00 முதல் பிற்பகல், 2:00 மணி வரையிலும், 7, 8ம் வகுப்புகளுக்கு, பிற்பகல், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரையிலும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. டிசம்பர், 23ல் தேர்வுகள் முடிய உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி